Published:Updated:

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலையொட்டி சிறப்பு ரயில்கள்: இன்று முதல் முன்பதிவு!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலையொட்டி சிறப்பு ரயில்கள்: இன்று முதல் முன்பதிவு!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலையொட்டி சிறப்பு ரயில்கள்: இன்று முதல் முன்பதிவு!

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலையொட்டி சிறப்பு ரயில்கள்: இன்று முதல் முன்பதிவு!

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நெல்லையில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 24 மற்றும் 31-ம் தேதிகளில் (வியாழக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்:06134), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்:06135), மறுநாள் அதிகாலை 2.15 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

நாகர்கோவில்-செங்கல்பட்டு

நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 6 மற்றும் 13-ம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்:06136), அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 7 மற்றும் 14-ம் தேதிகளில் (திங்கட்கிழமை) பகல் 12.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்:06137), அடுத்தநாள் காலை 4.15 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

கோவை-செங்கல்பட்டு

கோவையில் இருந்து டிசம்பர் 3, 6, 8, 10, 13, 15, 17, 20, 22, 24, 27, 29, 31 மற்றும் ஜனவரி 3, 5, 7, 10, 12, 14, 17, 19 மற்றும் 21-ம் தேதிகளில் இரவு 10.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்: 06144), மறுநாள் காலை 8 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 4, 7, 9, 11, 14, 16, 18, 21, 23, 25, 28, 30 மற்றும் ஜனவரி 1, 4, 6, 8, 11, 13, 15, 18, 20 மற்றும் 22-ம் தேதிகளில் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06145), மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு கோவையை சென்றடையும்.

விசாகப்பட்டினம்-கொல்லம்


விசாகப்பட்டினத்தில் இருந்து நாளை முதல் ஜனவரி 24-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்:08567), செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜனவரி 26-ம் தேதி வரை (செவ்வாய்க்கிழமைகளில்), காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்:08568), மறுநாள் பகல் 1.45 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடையும்.

இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.