Published:Updated:

சென்னையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் 2 நாள் முகாம்: அன்புமணி தகவல்!

விகடன் விமர்சனக்குழு
சென்னையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் 2 நாள் முகாம்: அன்புமணி தகவல்!
சென்னையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் 2 நாள் முகாம்: அன்புமணி தகவல்!

சென்னை: மழைக்கால நோய்களில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள பசுமைத் தாயகம் சார்பில் சென்னையின் அனைத்து வட்டங்களிலும் நிலவேம்பு கசாயம் வழங்கும் இரண்டு நாள் முகாமை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்த்தார்.

சென்னையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் 2 நாள் முகாம்: அன்புமணி தகவல்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளாலும், தேங்கிக் கிடக்கும் தண்ணீராலும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் உண்டாகும் சூழல் நிலவிவருகிறது.இதனால் அரசு சார்பிலும் தன்னார்வ அமைப்புகள் சார்பிலும் முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும்,பாமகவின் சார்பு இயக்கமான பசுமைத் தாயகம் சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்கமாக மயிலாப்பூரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். இந்த  முகாம் நாளையும் (13.12.2015) சென்னையில் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.