Published:Updated:

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு!

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு!
குமரி, நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு!

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு!

குமரி கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, தற்போது மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வட தமிழகம், புதுச்சேரியிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடனும், அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 4 செ.மீட்டரும், திருத்துறைப்பூண்டி, கடலூரில் தலா 3 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.