Published:Updated:

மும்பை, நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே!

மும்பை, நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே!
மும்பை, நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே!

சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து மும்பை மற்றும் நெல்லைக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் அறிவித்துள்ளது.

மும்பை, நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே!

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பயணிகளின் வசதிக்காகவும், கூட்டநெரிசலை குறைக்கவும் சென்னையில் இருந்து நெல்லை மற்றும் மும்பைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வருகின்ற 23-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06158) மறுநாள் மும்பை சி.எஸ்.டி.யை சென்றடையும்.

அதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் 13-ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு சுவீதா எக்ஸ்பிரஸ் ரயில் (00630) மறுநாள் நெல்லையை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.