''மிரட்டல்களில் உங்களுக்குப் பிடித்த மிரட்டல் எது?''

''பெரியாரின் பிளாக்மெயில். காதல், திருமணம், குழந்தைப்பேறு ஆகியவைபற்றி பல அதிர்ச்சி அளிக்கும் கருத்துகளைச் சொன்ன பெரியார்தான், தமிழகத்தில் முதன்முறையாக விவாகரத்துபற்றியும் குடும்பக் கட்டுப்பாடு பற்றியும் வலியுறுத்திப் பேசியவர்.

'காதலுக்கு வழிவைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
இதில் என்ன குற்றம்?’

- என்று குடும்பக் கட்டுப்பாடுபற்றி கவிதை தீட்டினார், பெரியார் வழியில் வந்த பாவேந்தர் பாரதிதாசன். 1930-களிலேயே விவாகரத்தை வலியுறுத்தி, 'ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்யாண விடுதலை வேண்டும்’ என்று செங்கல்பட்டு சுய மரியாதை மாநாட்டில் பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது, தமிழகத்தில் இருந்த பழமைவாதிகள், விவாகரத்தை மறுத்துப் பேசினார்கள். அப்போது பெரியார் எழுதினார்,

'நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பதுபோல கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின், கல்யாண மறுப்புப் பிரசாரமும், கல்யாணம் ஆன புருஷர்களுக்கும் பெண்களுக்கும் பல தார மணப் பிரசாரமும்தான் செய்ய வேண்டியது வரும்’ என்றார். என்ன ஒரு தில்லான மிரட்டல்!''

- அக்ஷயா, வேலூர்.

'' 'காந்தி உயிருடன் இருந்திருந்தால், அவரும்கூட ஊழல் செய்திருப்பார்’ என்கிறாரே கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி?''

''இது காந்தியைத் துளைத்த நான்காவது குண்டு!''

- ஆர்.ஆர்.உமா, திசையன்விளை.

'' 'கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்பதைத்தானே ஒசாமா பின்லேடனின் மரணம் காட்டுகிறது?''

''சதாம் உசேன், ஒசாமா பின்லேடன் இருவரையுமே உருவாக்கியதும் அமெரிக்காதான், அழித்ததும் அமெரிக்காதான். கத்தியை எடுத்தவன் மட்டும்தான் கத்தியால் சாவானா? கத்தியை உருவாக்குபவர்களுக்கு, இந்தப் பழமொழிகள் பொருந்தாதோ?''

- கா.வினோதினி, சேலம்.

'' 'ராணா படமாவது, கானா படமாவது’ என்று சொன்னதற்காக ரஜினி ரசிகர்கள் வடிவேலுவுக்கு எதிராகக் கொதிக்கிறார்களே?''

''பொதுவாகவே, வெளியில் வீராவேசமாக வடிவேலு பேசி வந்தாலும், உள்ளுக்குள் ஒரு உதைப்பு இருக்கும்... 'உளவுத் துறை அளவுக்கு நான் வொர்த் இல்லைங்க!’.''

- பா.நகைமுகன், மதுரை.

''தேடிச் செல்லுதல், தேடி வரவழைத்தல்... இரண்டில் எது சிறந்தது?''

''கருணாநிதியிடம் கேட்க வேண்டிய கேள்வி. 'அஜீரணக் கோளாறால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரஜினிகாந்த்தை, முதல்வர் மருத்துவமனைக்கே சென்று பார்த்தார். தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற பாலசந்தரோ, முதல்வரை வீட்டுக்குச் சென்று பார்த்தார்!''

- பா.மதி, சென்னை-91.