Published:Updated:

திணறிய ஜெட் ஏர்வேஸ்: 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது பயணிகளுக்கு மூச்சுத் திணறல்!

விகடன் விமர்சனக்குழு
திணறிய ஜெட் ஏர்வேஸ்:  32 ஆயிரம் அடி உயரத்தில்  பறந்த போது பயணிகளுக்கு மூச்சுத் திணறல்!
திணறிய ஜெட் ஏர்வேஸ்: 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது பயணிகளுக்கு மூச்சுத் திணறல்!

மும்பையில் இருந்து பாங்காங் வழியாக வியட்னாமின் ஹோசிமினுக்கு, இன்று காலை 9.30 மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம், 184 பயணிகளுடன்  புறப்பட்டது. போயிங் 739 ரகத்தை சேர்ந்த அந்த விமானம், பாங்காங்கில் தரையிறங்கி பின்னர் ஹோசிமின் புறப்பட வேண்டும். பாங்காங் சென்றடைய  ஒரு மணி நேரம் இருந்தபோது, விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணித்த சில பயணிகளால் மூச்சுத் திணறலை உணர முடிந்தது.

திணறிய ஜெட் ஏர்வேஸ்:  32 ஆயிரம் அடி உயரத்தில்  பறந்த போது பயணிகளுக்கு மூச்சுத் திணறல்!

தொடர்ந்து அனைத்து பயணிகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்கியது. வயதான பயணிகள் கத்தக் கூட முடியாமல் திணறத் தொடங்கினர்.  இதனைத் தொடர்ந்து விமானப் பணிப் பெண்கள்,  அவசர அவசரமாக பயணிகளுக்கு ஆக்சிஜன் மாஸ்க்குகளை வழங்கினர். இதையடுத்தே பயணிகள் மூச்சுத் திணறலில் இருந்து தப்பிக்க முடிந்தது. இந்த சம்பவத்தால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

அப்போது விமானம், மியான்மர் தலைநகர் யாங்கூன் அருகே பறந்து கொண்டிருந்தது. யாங்கூன் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததையடுத்து, அந்த விமானம் மதியம் 1.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது. பயணிகளும் பத்திரமாக விமானத்தை விட்டு  வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு தேவையான வசதிகள், யாங்கூன் விமான நிலையத்தில் செய்து தரப்பட்டது.

திணறிய ஜெட் ஏர்வேஸ்:  32 ஆயிரம் அடி உயரத்தில்  பறந்த போது பயணிகளுக்கு மூச்சுத் திணறல்!

டெல்லியில் இருந்து மற்றொரு ஜெட் ஏர்வேஸ்  விமானத்தில், தொழில் நுட்ப வல்லுநர்கள் யாங்கூன் சென்று, விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளை ஆராய்ந்து வருகின்றனர். இது குறித்து ஜெட் ஏர்வேஸ் அளித்துள்ள விளக்கத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக யாங்கூன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, விமானத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், இதய நோய் பாதிப்புக்குள்ளானவர்களும்  நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கும் உயிருக்கே ஆபத்தாய் முடிய வாய்ப்புள்ளது.