Published:Updated:

கொட்டும் உறைபனி... காஷ்மீராக மாறிய ஊட்டி (படங்கள்)

விகடன் விமர்சனக்குழு
கொட்டும் உறைபனி... காஷ்மீராக மாறிய ஊட்டி (படங்கள்)
கொட்டும் உறைபனி... காஷ்மீராக மாறிய ஊட்டி (படங்கள்)

கடுமையான உறைபனி நீடிப்பதால் ஊட்டியின் குறைந்த பட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. சில தினங்களில் ஜீரோ டிகிரியை குளிர் எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொட்டும் உறைபனி... காஷ்மீராக மாறிய ஊட்டி (படங்கள்)

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரம் துவங்கி, பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை பனிக்காலம் நீடிக்கும். இந்தாண்டு மழையின் காரணமாக டிசம்பர் மாதம் வரை பனியின் தாக்கம் உணரப்படவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாத இறுதியில் பனியின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியது. ஜனவரி முதல் வாரத்தில் பனியின் தாக்கம் மேலும் அதிகரித்து 5 டிகிரி செல்சியஸ், 4 டிகிரி செல்சியஸ் என குறைந்த பட்ச வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஊட்டி தலைக்குந்தா, எச்.பி.எப்., சூட்டிங் மட்டம், ரயில் நிலையம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் உறைபனி விழுந்த புல்வெளி பகுதிகள், காஷ்மீரை போன்று காட்சியளிக்கிறது. சராசரியாக குறைந்த பட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக இருந்தது. பள்ளத்தாக்கு பகுதிகளில், நள்ளிரவு குறைந்தபட்ச வெப்பநிலை, 'ஜீரோ' டிகிரி செல்சியஸ் அளவை தொட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

கொட்டும் உறைபனி... காஷ்மீராக மாறிய ஊட்டி (படங்கள்)

நீலகிரியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடும் உறை பனி பொழிவால் அதிகாலை நேரங்களில், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரித்திருப்பதால், தேயிலை மற்றும் மலை காய்கறி செடிகளும் கருக துவங்கியுள்ளன. அப்பர்பவானி, அவலாஞ்சி, கோரகுந்தா பகுதிகளில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்காவில், வரும் ஏப்ரலில் துவங்கவுள்ள கோடை சீசனுக்கு, மலர் செடிகளை நடவு செய்து பராமரிக்கும் பணி துவங்கியுள்ள நிலையில், செடிகளை பாதுகாக்க, பிளாஸ்டிக் போர்வைகளை செடிகளின் மேல் போர்த்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

-ச.ஜெ.ரவி