Published:Updated:

கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: உயிருக்கு போராடும் சோகம் (வீடியோ)

கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: உயிருக்கு போராடும் சோகம் (வீடியோ)
News

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் கடல் பகுதியில் திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குலசேகரன்பட்டினம்,  கல்லாமொழி பதுவைநகர் கடற்கரையில், நேற்று மாலை  திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கின. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் கடற்கரையில் திரண்டனர். பின்னர் அவர்கள் திமிங்கலங்களை கடலில் விட முயற்சி செய்தனர். ஆனாலும் திமிங்கலங்கள் தொடர்ந்து கரை ஒதுங்கியவாறு இருந்தன. இதில் 20 திமிங்கலங்கள் இறந்துவிட்டன.  நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக குலசேகரன்பட்டினம் காவல்துறையினருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும்,காவல்துறையினரும், கடலோர காவல் படையினரும் விரைந்து வந்தனர். கரை ஒதுங்கிய திமிங்கலங்களை ஆழ்கடலில் விட நடவடிக்கை எடுத்தனர்.

திமிங்கலங்களை கொல்லும் ஆற்று நீரில் கலக்கும் நச்சுக்கழிவுகள்!

தமிழகத்தின் கடலோர பகுதிகளான மன்னார் வளைகுமா, பாக் ஜலசந்தி பகுதிகளில் பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. டால்ஃபின், கடல் பசு, திமிங்கலங்கள், கடற்குதிரைகள் இதில் முக்கியமானவை.

இதற்கு முக்கிய காரணமாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் கழிவுகள்தான் காரணமென்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல தமிழக ஆறுகளில் வழியாக நாள் ஒன்றுக்கு 5 லிட்சம் லிட்டர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் கடலில் கலந்தவண்ணம் உள்ளன. இதுதான் தற்போது திமிங்கலங்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடல் நீர் மாசினால் கடல் வாழ் உயிரினங்கள் சுவாசிக்கத் திணறுகின்றன. அத்துடன் கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமென்று சொல்லப்படுகிறது. அத்துடன் நச்சுக்கழிவு காரணமாக பாசிகள் பவளப்பாறைகளுக்கு அழிந்து வருகின்றனவாம்.