Published:Updated:

ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார்; குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது: சோ

Vikatan Correspondent
ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார்; குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது: சோ
ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார்; குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது: சோ
ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார்; குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது: சோ

சென்னை: தமிழ்நாட்டிற்காக ஜெயலலிதா பல்வேறு சாதனை படைத்துள்ளார் எனவும், குடும்ப ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது எனவும் பத்திரிகையாளர் சோ கூறியுள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் 46-வது ஆண்டு விழா சென்னை, ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ பேசுகையில், ''சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமிழக அரசு முதலில் நிவாரணப் பணிகளில் தடுமாறினால், பின்னர் சிறப்பாக செயல்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் குறைகள் இருந்தாலும், நிறைகள் அதிகமாக இருக்கிறது. மாநிலத்தின் தேவைக்காக ஜெயலலிதா மத்திய அரசுடன் போராடி வருகிறார். அதேபோல், தமிழகத்தின் முக்கிய தண்ணீர் ஆதாரமான முல்லை பெரியாறு, காவிரி ஆகியவற்றில் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை பெற்று தந்திருக்கிறார். இது இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனை.

தி.மு.க.வில் முதல்வர் பதவிக்கு கருணாநிதி, ஸ்டாலின் இடையே போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி மீண்டும் வராமல் இருக்க நமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். எனவே, வரும் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வராதோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்'' என்றார்.