வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (01/02/2016)

கடைசி தொடர்பு:12:56 (01/02/2016)

விக்ராந்த் போர்க்கப்பலின் இரும்பில் தயாரான புதிய பஜாஜ் பைக்! (வீடியோ)

1971ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில்,  பாகிஸ்தானை தோற்கடிக்க காரணமாக இருந்தது விமானந்தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விக்ராந்த் கப்பலின் இரும்பில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது பஜாஜ் நிறுவனம்.

அந்தக்  கப்பலைப் பெருமைப்படுத்தும் விதமாக, பைக்கிற்கு V எனப் பெயர் சூட்டியுள்ளதுடன், கப்பலின் லோகோவையும் இதில் பொருத்த முடிவு செய்துள்ளது பஜாஜ். மற்ற விபரங்களான இன்ஜின், விலை, வேரியன்ட் ஆகியவை பிப்ரவரி 1 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

சரியாக குடியரசு தினத்தன்று V பைக்கின் டீஸரை வெளியிட்டு, தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி இருக்கிறது பஜாஜ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ...

             

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்