Published:Updated:

ஓடும் ரயிலை மறித்து தீ வைத்து எரித்த காப்பு சமூகத்தினர்: அதிர்ச்சி வீடியோ

விகடன் விமர்சனக்குழு
ஓடும் ரயிலை மறித்து தீ வைத்து எரித்த காப்பு சமூகத்தினர்: அதிர்ச்சி வீடியோ
ஓடும் ரயிலை மறித்து தீ வைத்து எரித்த காப்பு சமூகத்தினர்: அதிர்ச்சி வீடியோ

ஹைதராபாத்: இட ஒதுக்கீடு கேட்டு ஆந்திர மாநிலத்தில் போராட்டம் நடத்திவரும் காப்பு சமூகத்தினர்,  இரண்டு நாளுக்கு முன்பு ஓடும் ரயிலை மறித்து, கல்வீசித் தாக்கி தீ வைத்து எரித்து, அம்மாநில அரசுக்கு அதிர்ச்சி அளித்தனர். ரயிலுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியிருக்கிறது.

ஓடும் ரயில் திடீரென்று நிறுத்தப்படுகிறது. உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகள் செய்வதறியாது திகைக்கின்றனர்.  கற்களைக் கொண்டு காப்பு இனத்தவர் ரயில் பெட்டிகளைக் குறிப்பாக ஏ.சி. பெட்டிகளை தாக்கி, தீ வைக்கின்றனர். நெஞ்சை பதை பதைக்க வைக்கும் அந்த வீடியோவை கீழ் வரும் இணைப்பில் காணலாம்.

Rare Footage Of Train Rathnachal Express At Tuni Kapu Mahasabha. .

Posted by Raghavendra Swamy Gollapalli on Tuesday, February 2, 2016