Published:Updated:

சியாச்சின் பனிப்பாறையில் சிக்கி உயிரிழந்த 10 ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள்!

Vikatan Correspondent
சியாச்சின் பனிப்பாறையில் சிக்கி உயிரிழந்த 10 ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள்!
சியாச்சின் பனிப்பாறையில் சிக்கி உயிரிழந்த 10 ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள்!

புதுடெல்லி: சியாச்சின் சிகரத்தில் பனிப்பாறையில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் சியாச்சின் சிகரத்தில் 19 சுமார் ஆயிரம் உடி உயரத்தில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. சிகரத்தில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. பனிக்காலம் மற்றும் மைனஸ் 69 டிகிரி செல்சியசுக்கு கீழே வெப்ப நிலை வரும்போது பனிச்சரிவு ஏற்படுகிறது.

சியாச்சின் பனிப்பாறையில் சிக்கி உயிரிழந்த 10 ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள்!

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி ராணுவ முகாம் மீது  பெரிய பனிப்பாறை ஒன்று விழுந்து அமுக்கியது. இதில், ராணுவ நிலையில் இருந்த ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் பனிப்பாறைக்குள் புதைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களும் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், பனிப்பாறை பெரிய அளவில் இருப்பதால் அதை உடைத்து உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பனிப்பாறைக்குள் சிக்கி உயிரிழந்த வீரர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை, தேனி மாவட்டம் குமணண்தொழு என்ற கிராமத்தைச் சேர்ந்த குமார், மதுரை மாவட்டம் சொக்கத்தேவன்பட்டியைச் சேர்ந்த கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டம் குடிசதனபள்ளியைச் சேர்ந்த மூர்த்தி ஆகியோர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேரும், கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தலா ஒரு வீரரும் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.