Published:Updated:

வரலாற்றை திரித்து இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி... சரத் பவார்!

Vikatan Correspondent
வரலாற்றை திரித்து இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி... சரத் பவார்!
வரலாற்றை திரித்து இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி... சரத் பவார்!
வரலாற்றை திரித்து இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி... சரத் பவார்!

மும்பை: பள்ளி புத்தகங்களில் வரலாற்றை திரித்து வெளியிட்டு, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான முயற்சி நடைபெறுகிறது என்று சரத் பவார் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பேசும்போது, ''பள்ளி புத்தகங்களில் வரலாற்றை திரித்து வெளியிட்டு, இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.

நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இது தீங்கு விளைவிப்பதால், இது மிகவும் ஆபத்து நிறைந்தது. சமுதாயத்தில் நஞ்சை பரப்புவதற்காக, இது இளைஞர்களின் மனதில் கெடுதியை விதைக்கும் செயல் என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், இது மிகவும் தீவிரமான பிரச்னை என்பதால், எழுத்தாளர்கள் இது தொடர்பாக கட்டுரை எழுத வேண்டும். விவாதங்களும் அரங்கேற வேண்டும். சிவாஜி மகாராஜா முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல.

தன்னுடைய படையில் அவர் முஸ்லிம்களை முக்கியமான இடத்தில் வைத்திருந்தார். ஆகையால், இதுபோல் வரலாற்றை திரித்து கூறுவது மதச்சார்பற்ற நாட்டுக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லது அல்ல" என்றார்.