Published:Updated:

வேலூரில் பரபரப்பு; வானில் இருந்து விழுந்து வெடித்தது வெடிகுண்டா? ஒருவர் பலியால் பீதி!

Vikatan Correspondent
வேலூரில் பரபரப்பு; வானில் இருந்து விழுந்து வெடித்தது வெடிகுண்டா? ஒருவர் பலியால் பீதி!
வேலூரில் பரபரப்பு; வானில் இருந்து விழுந்து வெடித்தது வெடிகுண்டா? ஒருவர் பலியால் பீதி!

வேலூர்: கல்லூரி வளாகத்தில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள் ஒன்று வெடித்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் டிரவைர் ஒருவர் பலியாகியுள்ளதால் அந்தப் பகுதியில்  பீதி நிலவுகிறது. 

வேலூரில் பரபரப்பு; வானில் இருந்து விழுந்து வெடித்தது வெடிகுண்டா? ஒருவர் பலியால் பீதி!

வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் அதிக சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்துள்ளது. இதனால் கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்து பார்த்தபோது கல்லூரி பேருந்து கண்ணாடிகள் நொறுங்கிக் கிடந்துள்ளன. மேலும் பேருந்து ஓட்டுநர் காமராஜ் என்பவர்,  பலத்த காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

வேலூரில் பரபரப்பு; வானில் இருந்து விழுந்து வெடித்தது வெடிகுண்டா? ஒருவர் பலியால் பீதி!

தற்போது காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்,  வெடித்தது ஏதேனும் வெடிகுண்டா அல்லது விண்கற்களா என விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில்," காது செவிடாகுற அளவு பயங்கர சத்தத்தோட ஒரு பொருள் வானத்திலிருந்து விழுந்துச்சு. அதனால 3 அடிக்கு பள்ளம் ஏற்பட்டிருக்கு. இந்த சம்பவத்தின் போது பக்கத்தில இருந்த பஸ் டிரைவர் காயம்பட்டு இறந்துட்டார். மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.

இந்தத் திடீர் வெடிப்புக்கு தீவிரவாதிகள் சதிச் செயல் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த டிரைவரின் பின்னணி குறித்தும் விசாரிக்கப்பட்டுவருகிறது. 

- அ.அச்சணந்தி