Published:Updated:

புது கண்டுபிடிப்புகளை வரவேற்கும் 'குருக்‌ஷேத்ரா'!

புது கண்டுபிடிப்புகளை வரவேற்கும் 'குருக்‌ஷேத்ரா'!
புது கண்டுபிடிப்புகளை வரவேற்கும் 'குருக்‌ஷேத்ரா'!

ல்லூரிகளில் பலவற்றிலும் கலைவிழாக்கள் போட்டிகள் நடப்பது வழக்கம். ஆனால், புது கண்டுபிடிப்புகளை வரவேற்கும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூகத்தை மேம்படுத்த ஊக்குவிக்கும் சர்வதேச அளவிலான தொழில்நுட்ப விழாக்கள் மிக குறைவு. அதனை 10 ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறது சென்ன்னை அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி. இது, 'குருக்‌ஷேத்ரா' – 'அறிவால் வெல்லும் போர்க்களம்' என்று அழைக்கப்படுகிறது.

புது கண்டுபிடிப்புகளை வரவேற்கும் 'குருக்‌ஷேத்ரா'!

இந்த வருடம் 'கே 16' நேற்று (17-ம் தேதி) தொடங்கியது. 20-ம் தேதி வரை வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.ஈ.ஓ.க்கள், அறிவியல் ஆய்வாளர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் துணை இயக்குநர் டாக்டர். சேஷாகிரி ராவ், ஏர்டெல் சி.ஈ.ஓ ஹேமந்த் குமார் குருசுவாமி, புதிதாக வந்து இன்று வேகமாக வளரும் ஃப்ர்ரெஷ் டெஸ்க், பேங்க் பசார் நிறுவனங்களில் இருந்தும் சி.ஈ.ஓ.க்களும் கலந்து கொள்கின்றனர்.

இதுமட்டுமல்லாது பொறியியல், ரோபோட்டிக்ஸ், மேலாண்மை பிரிவுகளில் பயிற்சிகூடங்கள் நடத்த உள்ளனர். 3டி பிரிண்டிங், கோடிங்க், கண்ணால் கட்டுபடுத்தக்கூடிய ரோபோக்கள் என ஆச்சரியமான அறிவியல் விஷயங்களை கற்றுத்தர உள்ளது கே 16.

புது கண்டுபிடிப்புகளை வரவேற்கும் 'குருக்‌ஷேத்ரா'!

மாணவர்களின் அறிவுக்கு தீனி போடும் பல ஆன்லைன் மற்றும் நேரடியான போட்டிகளும் நடந்துகொண்டே இருக்கின்றன. கோடிங், ப்ரோக்ராமிங், புதிர்கள், போட்டிகள் என எல்லாவற்றிற்கு பல லட்சம் பரிசுகளையும் அள்ளிதர உள்ளது குருக்‌ஷேத்ரா.

இது தொடர்பாக 'ஈ ஃபார் எஜுகேட்' என ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவும் ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளனர். நம் வீடுகளில் தேவையில்லாத எத்தனையோ மின்சார பொருட்கள் உள்ளனது. பழுதடைந்த அந்த பொருட்களை என்ன செய்வதென்றே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. மின் சாதனங்களை குப்பையில் போடுவது தவறு. அவற்றை முறையாக மறுபயன்பாடிற்கு தயார் செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு சென்று இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். ஸ்கை வாக் மாலில் நடந்த நிகழ்வில் ஒரு டன்  பழுதடைநத் மின் சாதனங்களை சேர்த்து அதனை மறு பயன்பாட்டிற்கு அனுப்பி, அதன் மூலம் வரும் பணத்தை ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவும் பூமி என்ற தன்னார்வல நிறுவனத்திற்கு அளிக்கின்றனர். சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, கல்விக்கும் உதவும் இந்த முயற்சி பலராலும் பாராட்டப் பெற்றது.

புது கண்டுபிடிப்புகளை வரவேற்கும் 'குருக்‌ஷேத்ரா'!

முதல் நாளான நேற்று பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விஞ்ஞானி அபாஸ் மித்ரா கலந்து கொண்டு, பிளேக் ஹோல்களை பற்றி உரையாற்றினார். வரும் நாட்களில் பல முக்கிய வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

புது கண்டுபிடிப்புகளை வரவேற்கும் 'குருக்‌ஷேத்ரா'!

மேலும், பள்ளி மாணவர்களிடையே பொறியியலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஹோம் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் 'க்ரித்தி' என்னும் பயிற்சி நடக்கவிருக்கிறது.

ஸ்டார்ட் அப் வீக்கெண்ட் என்ற ஒரு நிகழ்வில். புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க மாணவர்கள் தங்கள் யோசனைகளை கூறலாம். அதை ஒரு வெற்றிகரமான ஒரு தொழிலாக மாற்றியமைக்க பயிற்சி தரப்படும்.

ஐ.மா.கிருத்திகா

படங்கள்: பா.அபிரக்‌ஷன்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

அடுத்த கட்டுரைக்கு