Published:Updated:

ரூ. 12 கோடிக்கு சொத்து குவித்த ரவுடி 'காதுகுத்து 'ரவியின் பின்புலம் என்ன?

ரூ. 12 கோடிக்கு சொத்து குவித்த ரவுடி 'காதுகுத்து 'ரவியின் பின்புலம் என்ன?
ரூ. 12 கோடிக்கு சொத்து குவித்த ரவுடி 'காதுகுத்து 'ரவியின் பின்புலம் என்ன?

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காதுகுத்து ரவி, சட்டவிரோதமாக வாங்கிக்குவித்த ரூ. 11.86 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ரூ. 12 கோடிக்கு சொத்து குவித்த ரவுடி 'காதுகுத்து 'ரவியின் பின்புலம் என்ன?

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் காதுகுத்து ரவி. வடசென்னையைச் சேர்ந்த இவர் மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஐந்து முறை குண்டர் சட்டத்தில் கைதான காதுகுத்து ரவி, சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கிக்குவித்திருந்தார். கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், நில அபகரிப்பு மிரட்டலில் ஈடுபடுவது என பணம் கோடி கோடியாக சேர்ந்துள்ளது.

இந்த சொத்துக்களை முடக்குமாறு, மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தமிழக போலீசார் பரிந்துரை செய்திருந்தனர். அதன்பேரில் காதுகுத்து ரவியின் 11.86 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

ஒரு காலத்தில்  கதிரவன், மாட்டு சேகர், வெள்ளை உமா, காதுகுத்து ரவி, ஜெர்மன் ரவி, சின்னா ஆகியோர் காஞ்சி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்புவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருந்தனர். சென்னை சுற்று வட்டாரத்தில் இந்த கும்பல் வைத்ததே சட்டமாக இருந்தது.  அந்த சமயத்தில் செம்மரம் மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸில் பல ஆயிரம் கோடிகளைக் குவித்த சாகுல் ஹமீதுவுக்கும்,  காதுகுத்து ரவிக்கும் மாமூல் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. உயிருக்குப் பயந்து சாகுல் ஹமீது  துபாய் சென்று விட்டார்.

சாகுல் ஹமீதுவுக்கும் வெள்ளை உமா என்ற ரவுடிக்கும் நல்ல  நட்பு உண்டு. சாகுல் ஹமீதுக்கு ஆதரவாக  வெள்ளை உமா களத்தில் இறங்கினான். காதுகுத்து ரவிக்கு சின்னா பக்கபலமாக இருந்தான். இந்த கும்பலுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு. பல இடங்களில் வைத்து மோதிக் கொண்டனர். அப்பு பல முறை கூறி பார்த்தும்,  இவர்கள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டுக் கொண்டனர். இந்த கும்பலிடம் இருந்து அப்பு ஒதுங்கிக் கொண்டார்.

இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் காதுகுத்து ரவியின் நண்பர் சின்னாவை வெள்ளை உமா கொலை செய்தார். அடுத்து காதுகுத்து ரவியை குறி வைப்பதாக தகவல் கிடைக்க , முந்திக் கொண்ட ரவி  வெள்ளை உமாவை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது நண்பர் கதிரவனையும் கொலை செய்துள்ளார். கதிரவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசில் சரண் அடைந்தார்.

அடுத்த கட்டுரைக்கு