Published:Updated:

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி என். ஹரிஷ் மர்ம சாவு: போலீசார் அதிர்ச்சி!

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி என். ஹரிஷ் மர்ம சாவு:  போலீசார்  அதிர்ச்சி!
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி என். ஹரிஷ் மர்ம சாவு: போலீசார் அதிர்ச்சி!

சென்னை: பூட்டிய அறைக்குள்  ஐ.பி.எஸ். அதிகாரி என். ஹரிஷ் மர்மான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம்,  சென்னை போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை  எழும்பூரில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான  விடுதியில்,  ஹரிஷ் பிணமாகக் கிடந்துள்ளார்.    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான ஹரிஷ், அண்மையில்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு  பணியிட மாற்றம் செய்யப்பட்டு,  தமிழக காவல்துறையின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் ஏஎஸ்பி-யாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி என். ஹரிஷ் மர்ம சாவு:  போலீசார்  அதிர்ச்சி!

ஹரிஷ்  மரணம்  குறித்து சென்னை போலீஸ் தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எழும்பூர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விடுதியில் அறை எண் 104-ல் ஹரிஷ் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இன்று (வியாழன்) காலை,  அவரது அறை நீண்ட நேரம் திறக்காததை அடுத்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி என். ஹரிஷ் மர்ம சாவு:  போலீசார்  அதிர்ச்சி!



தகவலறிந்து வந்த போலீஸ்,  அறைக்கதவை உடைத்து ஹரிஷ் உடலை  மீட்டனர். 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் அணியைச்  சோ்ந்தவர் என்.ஹரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: - ப.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு