Published:Updated:

அம்மா பேனர் அராஜகம்… திணறும் எதிர்க்கட்சிகள்!

அம்மா பேனர் அராஜகம்… திணறும் எதிர்க்கட்சிகள்!
அம்மா பேனர் அராஜகம்… திணறும் எதிர்க்கட்சிகள்!

காஞ்சிபுரத்தில், 20-ம் தேதி தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடும், 21-ம் தேதி சிங்கபெருமாள்கோவில் அருகில் உள்ள ஆப்பூரில், ஸ்டாலின் நடத்தும் உறுதி முழக்க பேரணியும் நடைபெறுகின்றது. ஆனால் காஞ்சிபுரம் நகரம் முழுக்கவே அதிமுகவின் பேனர்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன.  முக்கிய சாலைகள், மார்க்கெட், வணிக வளாகம் என அனைத்துப் பகுதிகளிலும், எவ்வித அனுமதியும் பெறாமல் அதிமுகவினர் பேனர் வைக்கின்றனர். பேனர்களால் வியாபாரம் குறைந்து விட்டது என வணிகர்களின் புலம்பல் சத்தம் கேட்கின்றது.

அம்மா பேனர் அராஜகம்… திணறும் எதிர்க்கட்சிகள்!

வணிகர்கள் வட்டாரத்தில் பேசினோம்…

“ ஆளும் கட்சியினர் பேனர் வைத்து கடைகளை மறைத்து விட்டார்கள். ஒரு கடையை பலமுறை தேடிதேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதனால் வியாபாரம் குறைந்துவிட்டது. மருத்துவமணை, ஹோட்டல், ஜவுளிக்கடை, மளிகைக் கடை என எல்லோரும் ஆளும் கட்சியினரின் பேனர்களால் அவதிப்படுகின்றோம்” என புலம்புகிறார்கள்.

காஞ்சிபுரம் தேமுதிக நகரசெயலாளர் நித்தியகுமார், “நாங்க பேனர் வைக்கக் கூடாது என மிரட்டல் விடுக்கின்றார்கள். 50 பேனர்கள் வைக்க கேட்டால் வெறும் 10 பேனர் வைக்கத்தான் அனுமதி கொடுக்கின்றார்கள். இதுவரை நூற்றுக்கணக்கான பேனர்களை காஞ்சிபுரம் நகரம் முழுவதும் அதிமுகவினர் வைத்துள்ளனர். ஒன்றரை மாதமாக ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக பேனர் வைக்க அனுமதி கொடுத்திருக்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க,  தேரடி பகுதியில் நடந்த மீட்டிங்கிற்காக வைக்கப்பட்ட பேனர்கள்,  மீட்டிங் நடத்தி ஒருமாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் அகற்றப்பட வில்லை. தேமுதிக சார்பாக பல இடங்களில் எழுதி வைக்கப்பட்ட சுவர் விளம்பரங்களையும் அதிமுகவினர் அழித்துவிடுகின்றார்கள்.

அம்மா பேனர் அராஜகம்… திணறும் எதிர்க்கட்சிகள்!

காவல்துறையிடம் புகார் கொடுத்தால் அவர்கள் அந்த கட்சியின் மாவட்டச்  செயலாளர்கள்போலவே 'அவங்க அப்படித்தான் செய்வாங்க விட்டுடுங்க'ன்னு சொல்லி அனுப்பிவிடுகின்றார்கள். காவல்துறையே ஆளும் கட்சிக்கு பயந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கு மாவட்டச்  செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மீதுள்ள கிசுகிசுக்களை பற்றி தேமுதிகவினர் விமர்சித்ததால்,  எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என நினைக்கிறார் வாலாஜாபாத் கணேசன். பேனர் வைக்க வரும் ஆட்களை, ' நீங்க அங்க வேலை செய்யக் கூடாது. அங்கே வேலை செய்தால் நாங்க வேலை கொடுக்க மாட்டோம்' என்று மிரட்டுகின்றார்கள். இதனால் வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து பேனர் வைக்கின்றோம். அதிமுகவின் அராஜகங்களுக்கு முடிவுகட்டும் மாநாடாக இந்த மாநாடு அமையும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதுபோல் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே பயணம் மூலம் மக்களை சந்தித்தார் ஸ்டாலின்.  அதன் நிறைவுநாள் பொதுக்கூட்டம், வரும் 21-ம் தேதி சிங்கபெருமாள்கோவில் அருகில் உள்ள ஆப்பூரில், ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்றது. ஆனால் அதற்கான அறிகுறிகளே காஞ்சிபுரத்தில் தென்படவில்லை. எட்டுத்திக்கும் அம்மா பேனர்தான் வரவேற்கிறது. ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்காக காஞ்சிபுரத்தில் பேனர் வைக்க இடம் இல்லாத அளவிற்கு காஞ்சிபுரம் முழுக்கவே அதிமுகவினர் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர். அதிகாரிகளும் அவங்களுக்கு அடிமையாக இருக்கின்றார்கள்” என்று பொரிந்து தள்ளினார்.

அம்மா பேனர் அராஜகம்… திணறும் எதிர்க்கட்சிகள்!

இதுகுறித்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ அருண் தம்புராஜ், ” தேமுதிகவுக்கு 100 பேனர்கள் வைக்க அனுமதி கொடுத்துள்ளோம். அதிமுகவின் பேனர்களை பற்றி புகார் வந்திருக்கின்றது. அந்த பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிமுகவினரிடம் சொல்லியிருக்கின்றோம்” என்று முடித்துக்கொண்டார்.

- பா.ஜெயவேல்

அடுத்த கட்டுரைக்கு