Published:Updated:

4 ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல். லாபகரமாக இயங்கும் என்கிறார் ரவி சங்கர் பிரசாத்!

புதுடெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனம், இன்றும் 4 ஆண்டுகளில் லாபகரமாக இயங்கும் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக இன்று மாநிலங்களவையில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, ''அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சென்ற நிதியாண்டில் நிர்வாக செலவுகளை குறைத்ததன் மூலம் ரூ.672 கோடியை லாபமாக ஈட்டி உள்ளது.

பி.எஸ்.என்.எல்-ன் தொடர் முயற்சியால் சென்ற நிதியாண்டில் 4.16 சதவீதம் வருமானம் அதிகரித்தது. ஜூன் 2015 வரை சராசரி மொபைல் இணைப்புகள் 8 லட்சமாக இருந்து வந்தது. ஆனால் அதன்பிறகு, 15 லட்சமாக உயர்ந்துள்ளது. மொபைல் நெட்வொர்க் சேவையை மாற்றிக்கொள்ளும் எம்.என்.பி. வசதி மூலமாகவும் கணிசமான அளவில் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், மொபைல் நெட்வொர்க் பிரிவில் பி.எஸ்.என்.எல்-ஐ முன்னிலையில் கொண்டுவர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், இன்னும் 4 ஆண்டுகளில் லாபகரமாக இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாக பி.எஸ்.என்.எல். இருக்கும்" என்று தெரிவித்தார்.