Published:Updated:

வேலூர் சிறையில் நளினியுடன் சகோதரர் சந்திப்பு!

வேலூர் சிறையில் நளினியுடன் சகோதரர் சந்திப்பு!
வேலூர் சிறையில் நளினியுடன் சகோதரர் சந்திப்பு!

வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை, அவரது சகோதரர் பாக்கியநாதன் சந்தித்துப் பேசினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 7 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (3-ம் தேதி) வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை அவரது சகோதரர் பாக்கியநாதன் சந்தித்து பேசினார்.

வேலூர் சிறையில் நளினியுடன் சகோதரர் சந்திப்பு!

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த 25 ஆண்டுகளாக நளினி உள்பட 7 பேரும் சிறையில் இருக்கின்றனர். இது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தற்போது தமிழக அரசு இவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது. மத்திய அரசிடம்‌ கருத்து கேட்டு  கடிதம் எழுதியுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.

இதற்கு முன்பும் இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வதாக இருந்தது. ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதையாக, அவர்கள் விடுதலையாகவில்லை. ஆனால், தற்போது இவர்கள் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் நளினிக்கும் இருக்கிறது.

அதே போல் மத்திய அரசும் மனிதாபிமான அடிப்பையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும். ஆனால், காங்கிரஸ் போன்ற கட்சிகள் 7 பேர் விடுதலை முடிவை ஒத்திவைக்க கோரியுள்ளனர். அது வருத்தம் அளிக்கிறது.

நளினி தனது மகளை விட்டு இத்தனை ஆண்டு காலம் சிறையில் இருக்கிறார். எனவே, இதை அரசியலாக பார்க்காமல் இவர்களை விடுதலை செய்ய ஒத்துழைக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலையில் இவர்கள் யாருக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், தப்புக்கு அதிகமாக தண்டனை அனுபவித்துள்ளனர்'' என்றார்.

-ம.சுமன்
(மாணவப் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு