Published:Updated:

ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் அசோக் கோஷ் காலமானார்!

ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் அசோக் கோஷ் காலமானார்!
ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் அசோக் கோஷ் காலமானார்!

ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் அசோக் கோஷ் காலமானார்!

கொல்கத்தா: ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கோஷ் இன்று கொல்கத்தாவில் காலமானார்.

திருமணம் செய்து கொள்ளாமல் பொதுச் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வந்த 94 வயது அசோக் கோஷ், மேற்கு வங்கத்தில் முதல் முறையாக இடதுசாரி ஆட்சி அமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அசோக் கோஷ். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். மேற்கு வங்க அரசியலில் 70 ஆண்டுகாலம் முக்கியப் பங்கு வகித்த அசோக் கோஷ், எளிமையான வாழ்க்கை முறை மூலம் அனைவரையும் கவர்ந்தவர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் பெரிதும் கவரப்பட்ட அசோக் கோஷ், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். நேதாஜி, காங்கிரஸில் இருந்து விலகி ஃபார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கியபோது, கோஷ் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஃபார்வர்டு பிளாக் கட்சியின் செயலாளராக 1952-ல் தேர்வு செய்யப்பட்ட அசோக் கோஷ், காலமாகும் வரை சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் அப்பொறுப்பில் இருந்துள்ளார். மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஜோதி பாசு, பிரமோத் தாஸ்குப்தா ஆகியோருடன் இணைந்து, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி இடதுசாரி அணியை ஆட்சியில் அமர்த்த முக்கியப் பங்கு வகித்தவர்.

அசோக் கோஷின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு