Published:Updated:

'கத்தி எடுக்கும் டாக்டர் போன்றவன்தான் நான்!'- யமுனா நதி சர்ச்சை குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ( வீடியோ)

மிழகத்தில் அரசியல் தலைவர்களை சந்திப்பதாகட்டும் அல்லது உலக கலாச்சார விழா நடத்துவதாகட்டும்,  எப்போதும் சர்சையின் நாயகனாக இருக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்...  சில தினங்களுக்கு முன்பு அவரை நாம் சந்தித்த போது, உலக கலாச்சார விழா குறித்தும், யமுனா வெள்ளச் சேதம் குறித்தும் சில கேள்விகளை எழுப்பினோம். 

அப்போது அவர் கூறியது இங்கே...

நீங்கள் மார்ச் 11-ம் தேதி ‘உலக கலாச்சார விழா’ யமுனா வெள்ளச் சமவெளியில் நடத்த திட்டமிட்டு உள்ளீர்கள் அல்லவா...?

ஆம். மிகப் பெரிய மாநாடு அது. 155 நாடுகளிலிருந்து, பொது மக்கள், தலைவர்கள் வருகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து முன்னாள் பிரதமர் கிலானி வருகிறார்.

ஆனால், நீங்கள் அந்த மாநாட்டிற்காக யமுனா வெள்ளச் சமவெளியில் தடையை மீறி கட்டுமானங்கள் கட்டுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உங்களுக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது அல்லவா...?

ஆம். சில விளக்கங்கள் கேட்டு இருந்தார்கள். எங்கள் மீது உள்ள பொறாமையால் யாரோ ஒருவர் புகார் தெரிவித்து இருக்கிறார். அதனால் எங்களிடம் விளக்கம் கேட்டார்கள். நாங்கள்தான் முதன்முதலாக யமுனா நதியை தூய்மை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். 500 டன் குப்பைகளை அகற்றி உள்ளோம். 5000 தன்னார்வாலர்கள் வேலை செஞ்சு யமுனாவை சுத்தம் செஞ்சதே நாங்கதான். ஒரு பாலம் கட்டியபோது சிமெண்ட் கழிவுகளை விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.  அதை நாங்கள்தான் சுத்தம் செய்தோம்.  
டாக்டர் கத்தியை எடுத்து ஆப்ரேசன் செய்வது, நோயாளியை காக்கதான். கத்தியை எடுக்கிறார் என்பதற்காக டாக்டரை வன்முறையாளர் என்று சொன்னால் எப்படி...?

டாக்டர் கத்தி எடுப்பது எப்படி நோயாளியை காக்கவோ, அது போல், நாங்கள் குப்பைகளை அகற்றவே JCB-யை எடுத்துக் கொண்டு போனோம், கட்டடங்கள் கட்டுவதற்கு அல்ல...

- மு. நியாஸ் அகமது

ஒளிப்பதிவாளர் : ம. அரவிந்த் (மாணவ பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு