Published:Updated:

அமளியுடன் முடிந்த புதுச்சேரி சட்டசபை கூட்டம்!

அமளியுடன் முடிந்த புதுச்சேரி சட்டசபை கூட்டம்!
அமளியுடன் முடிந்த புதுச்சேரி சட்டசபை கூட்டம்!

அமளியுடன் முடிந்த புதுச்சேரி சட்டசபை கூட்டம்!

புதுச்சேரி: எதிர்க்கட்சிகளின் அமளி, வெளிநடப்பு, இலவச மிக்சி, கிரைண்டர் உடைப்புடன் முடிந்திருக்கிறது புதுச்சேரியின் கடைசி சட்டசபை கூட்டம்.

அமளியுடன் முடிந்த புதுச்சேரி சட்டசபை கூட்டம்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம், புதுச்சேரி சட்டப்பேரவையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. அதனால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரசின் ஆறு மாதங்களுக்கான செலவினங்களுக்கு,  ரூ.3550 கோடிக்கு பேரவையின் ஒப்புதல் பெற சட்டப்பேரவைக் கூட்டம் (10-ம் தேதி) நடத்தப்பட்டது.

அமளியுடன் முடிந்த புதுச்சேரி சட்டசபை கூட்டம்!

முதல்வர் ரங்கசாமி,  செலவினங்களுக்கு சபையின் ஒப்புதலை கோரினார். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், ''இதைப்பற்றி விவாதம் நடத்த வேண்டும். விவாதத்திற்கு பிறகே ஒப்புதல் அளிக்க முடியும். ஒய்வூதியத்துக்கு ரூ.100 கோடி கூடுதலாக கோரப்பட்டுள்ளது. ஆனால் ஓய்வூதியம் எந்த வகை என உறுப்பினர்களுக்கு தெரிய வேண்டாமா?

அமளியுடன் முடிந்த புதுச்சேரி சட்டசபை கூட்டம்!

இதில் விவாதம் நடத்தாவிட்டால் பேரவை மரபையே அரசு புறக்கணிப்பதாக அர்த்தம்” என்றதோடு, "மன்னர் ஆட்சி போல இப்படி சபையை நடத்துவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அழைத்திருக்கவே வேண்டாம்” என்று சொல்லி தம் கட்சி உறுப்பினர்களோடு வெளிநடப்பு செய்தார்.

வெளியே வந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவை முன்பு, ''இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கியதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதோடு, தரமற்றும் இருக்கின்றது'' என்று சொல்லி அரசின் இலவச மிக்சி, கிரைண்டரை தரையில் போட்டு உடைத்தனர்.

சுமார் 45 நிமிடம் நடந்த பேரவை கூட்டத்தின் இறுதியில் பேசிய பேரவைத் தலைவர் சபாபதி, “13-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டம் இன்றோடு நிறைவு பெறுகிறது. இதுவரை 10 கூட்டத்தொடர்களும், 68 அமர்வுகளும் நடத்தப்பட்டிருக்கின்றது. 283 மணி நேரம் பேரவை செயல்பட்டிருக்கிறது. முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், உறுப்பினர்கள், பேரவை செயலர், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முடித்தார்.

-ஜெ.முருகன்

படங்கள்: அ.குரூஸ்தனம்

அடுத்த கட்டுரைக்கு