Published:Updated:

டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் 'பாபநாசம் '

டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் 'பாபநாசம் '
டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் 'பாபநாசம் '

டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் 'பாபநாசம் '

ற்போது இந்தியாவில் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் ஹீரோக்களை விட ஆன்மீகக் குருக்கள்தான் மாஸ் காட்டுபவர்கள். இந்த வாரத் தொடக்கத்தில் மஹா சிவாராத்திரியன்று கோவையில் சிறுவாணி மலையடிவார  ஈஷா யோக மையத்தில் இரவு,   பகலாக காட்சியளித்தது. மக்கள் வெள்ளத்தில் மலையே மூழ்கி கிடந்தது. பிரபலத் தொழிலதிபர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்ட  பிரபலங்களும் ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவின் முன் ஆஜர்.

டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் 'பாபநாசம் '

நள்ளிரவு நெருங்க நெருங்க 'டம் டம்' என்ற ஈஷாவின் அதிர வைக்கும் அந்த கொட்டு சத்தம் விண்ணை பிளந்தது.  மக்கள் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர். சிறுவாணி மலையும் 'டம் டம்'  சத்தத்தில் கிறங்கி போய் கிடந்தது. மஹா சிவராத்திரியன்று ஒரு  நாள் இரவு மட்டும் சிறுவாணி மலைக்கு சென்றவர்கள் சுமார் 5 லட்சம் பேர்.  சிறுவாணி கரையோரம்,  சிவராத்திரி விழா ஈஷாவில் சூடுபிடித்த சமயத்தில்தான் டெல்லியில்  பாபநாசத்தை சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ ரவிசங்கர்ஜி யமுனை ஆற்றாங்கரையோரத்தில் பாலம் கட்டுவதில் மும்முரமாக இருந்தார். இந்திய ராணுவமே முன்னின்று அவருக்காக  பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொள்கிறது. இந்த பாபநாசத்துக்காரருக்கு அந்தளவுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது . 

'உலகக் கலைவிழா' என்ற பெயரில் வாழும் கலை அமைப்பின்  ரவிசங்கர்ஜி நடத்தும் இந்த நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. விழாவுக்காக யமுனை ஆற்றாங்கரையோரம் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியால் யமுனை ஆறும் அதன் கரையோரமும் மாசுபட்டுள்ளதால் இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கக் கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த  வாழும் கலை அமைப்புக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இன்றைக்குள் அபராத தொகையை கட்ட வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் கெடுவும் விதித்துள்ளது.

டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் 'பாபநாசம் '

ஆனால் நேற்று வரை,' ஒரு பைசா கூட பணம் கட்டமாட்டேன்' என்று மாஸ் காட்டிய ரவிசங்கர்ஜி இன்று கொஞ்சம் கீழே இறங்கி வந்திருக்கிறார். உடனடியாக 5 கோடியை கட்ட முடியாது எனவும் அபாராதத்தை கட்ட நான்கு  வார கால அவகசாம் தேவை என்றும் வாழும் கலை அமைப்பு கூறியுள்ளது. தாங்கள் ஒரு அறக்கட்டளையாக செயல்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட கால கட்டத்தில் 5 கோடி ரூபாய் திரட்ட முடியாத நிலை உள்ளதால் கால அவகாசம் கேட்பதாகவும் அந்த அமைப்பு கோரியுள்ளது. எனினும் இன்று மலைக்குள் முதல் தவணையாக 25 லட்ச ரூபாய் கட்ட வேண்டும். இல்லையென்றால் இந்த விழா நடத்துவற்கு அரசு தனது பங்களிப்பாக அளித்த 2.5 கோடி பறிமுதல் செய்யப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

இதனிடையே உலக கலாச்சார திருவிழா சர்ச்சையில் சிக்கி உள்ளதால் இலங்கை, நேபாளம், ஜிம்பாப்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்க மறுத்து விட்டதும் ரவிசங்கர்ஜிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல்  யமுனை ஆற்றாங்கரையோரம் தொடங்கும் இந்த 3 நாள் விழாவால் டெல்லியே இன்று ஸ்தம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

டெல்லியில் இன்று ஒருநாளில் மட்டும் 20 ஆயிரம் திருமணங்கள் நடக்கின்றன. இதனால் டெல்லி நகரமே வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. தெற்கு டெல்லி ரிங் ரோடு, நொய்டா லிங் ரோடு, என்.ஹெச் 24, அக்ஷார்தாம், மயூர் விஹார் மகிபல்பூர் சவுக், மெகுராலி கிர்கான் சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் எறும்பு போலவே ஊர்ந்து செல்ல முடிகிறது. 

இப்படி ரவிசங்கர்ஜியால் டெல்லியே ஸ்தம்பித்து போய் இருக்கையில்,  மற்றொரு சாமியரான பாபா ராம்ஜியின் மூலிகை உணவு மையத்துக்கு இனிமேல் மத்திய அரசே பாதுகாப்பு வழங்கப் போகிறது.  ஹரித்துவாரில் பாபா ராம்தேவ் அமைத்திருக்கும் மூலிகை உணவு மையத்தை இனிமேல் மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாக்கப் போகின்றனர்.

இந்த 3 ஆன்மீக குருக்களுமே ஒரு விஷயத்தில் ஒற்றுமையானவர்கள். மத்திய தர வர்கத்தின் வீக்னசை கண்டுபிடித்து அதனை முதலீடாக கொண்டவர்கள். மக்கள் மனதில் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க ஒருவர் பிராணயத்தை கையில் எடுத்தார். இன்னொருவர் அமைதியாக வாழ்வது எப்படி என பாடம் எடுத்தார். இன்னொருவர் யோகா சொல்லிக் கொடுத்தார். இது தவிர,  இசையால் மயக்குவது 'கன்ஸ்யூமர் குட்ஸ் ' பொருட்கள் போல மூலிகை உணவு, ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பது அவற்றை விற்பனை செய்வது என மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிலும் இறங்கி விட்டனர்.

இவர்கள் ஆன்மீகம், அவர்கள் சார்ந்த விஷயங்களில் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போவதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஏற்கனவே கங்கையும் யமுனாவும் மாசுபட்டுப் போய்  கிடக்கையில், அங்கே போய்தான் ரவிசங்கர்ஜி பாலம் கட்டித்தான் விளையாட வேண்டுமா? அதற்காக
 ராணுவத்தையே வேலை வாங்குவது? மூலிகை  உணவு மையத்துக்கு மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு வேண்டுமென்று கேட்பதெல்லாம் எந்தவிதத்தில் நியாயம்?

இந்த ஆன்மீக குருக்களுக்கு யார் போய் பாடம் எடுப்பது? 

 

அடுத்த கட்டுரைக்கு