Published:Updated:

ஈஷாவும் காருண்யாவும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? 'சிறுதுளி'க்கு சில கேள்விகள்...

ஈஷாவும் காருண்யாவும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? 'சிறுதுளி'க்கு சில கேள்விகள்...
ஈஷாவும் காருண்யாவும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? 'சிறுதுளி'க்கு சில கேள்விகள்...

ஈஷாவும் காருண்யாவும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? 'சிறுதுளி'க்கு சில கேள்விகள்...

கோவையின் நீர் வளத்தைக் காப்பாற்ற உருவான அமைப்பு 'சிறுதுளி'. இதன் முதன்மை நிர்வாகி வனிதா மோகன், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற தொழில் அதிபர். இவரது பிரிக்கால் கம்பெனி,  கோவையின் பிரதான அடையாளம்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெற்று செயல்படும் 'சிறுதுளி' அமைப்பின் மீது சமீபகாலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. வனிதா மோகனுக்கு சில கேள்விகளை எழுப்பியிருந்தார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர்.

அந்தக் கேள்விகள் இங்கே அப்படியே...

'சிறுதுளி' வனிதா மோகனுக்கு சில கேள்விகள். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பிரிக்கால் நிறுவனத்தின் முதலாளியாக இருந்தாலும், நீர்நிலைகளைக் காப்பாற்ற நீங்கள் களத்தில் குதித்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டோம். எங்களுக்கு தீர்க்கதரிசியாகவே தெரிந்தீர்கள். தங்களது அமைப்பின் மூலமாக நொய்யல் ஆற்றை காக்க தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி,  என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது. தென்னிந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் நீங்களும் ஒருவர். உங்களைப் பார்த்து மற்ற தொழிலதிபர்களும் தங்கள் ஊரில் உள்ள நீர்நிலைகளை மீட்கும் முயற்சியில் இறங்கினால் தமிழகமே புத்துயிர் பெற்றிடும் என ஆனந்தம் கொண்டிருந்தோம்.

ஈஷாவும் காருண்யாவும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? 'சிறுதுளி'க்கு சில கேள்விகள்...


காலம்தான் எத்தனை சக்தி வாய்ந்தது, தங்கள் அமைப்பின் செயல்பாடுகளை பற்றி அலசியபோது, பிரச்னைகளை மடைமாற்ற வந்த கார்ப்பரேட் அமைப்போ என்ற சந்தேகம் வராமல் இல்லை. அதனடிப்படையில்தான் இந்தக் கேள்விகள் எழுகின்றன.

1. நொய்யல் ஆற்றின் ஆதாரப் பகுதியில்,  வனத்திலிருந்து 2 கி.மீ. சுற்றளவில் மத்துவராயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மினரல் வாட்டர் நிறுவனங்களால் ஏற்படும் நிலத்தடி நீர் பாதிப்புகளுக்கு தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? நண்டங்கரை தடுப்பனைக்கு 200 மீட்டர் தொலைவில் கூட ஒரு குடிநீர் நிறுவனம் உள்ளது. தொண்டாமுத்தூர்,  மாதம்பட்டி சாலையில்,  நொய்யலாற்றின் அருகிலேயே அமைந்துள்ளது ஒரு மினரல் வாட்டர் நிறுவனம் அமைந்துள்ளது. இவற்றுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்தீர்களா?

2. நொய்யலாற்றின் பிரதான நீர் ஆதாரப் பகுதிகளாக விளங்கும் மேற்குதொடர்ச்சி அடிவார கிராமங்களில்,  எந்த ஓர் அனுமதியுமில்லாமல் லட்சக்கணக்கான சதுர அடி இடங்கள் கான்கிரீட் காடுகளாக மாற்றப்பட்டுள்ளன. காருண்யா கல்வி நிறுவனம், பெதஸ்தா ஜெபக்கோபுரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இடங்களை வளைத்துப் போட்டுள்ளது. இதனால் முக்கிய நீர்வழித்தடங்கள் அடைபட்டுள்ளன. இதைப் பற்றி நீங்கள் கேள்வி எழுப்பியதுண்டா?

3. ஈஷா யோக மையம் என்ற பெயரில் 200 சதவீத காடுகளை அழித்து, யானை வழித்தடங்களை முற்றாக அழித்துவிட்ட கொடுமைகளுக்கு எதிராக ஒரு சிறு அறிக்கையாவது உங்களிடம் வந்திருக்குமா? சிவராத்திரி நடனம் என்ற பெயரில் வனவிலங்குகளை அச்சுறுத்தும் ஜக்கி வாசுதேவின் செயல்களுக்கு எதிராக ஒரு சிறு முனகலாவது உங்களிடம் இருந்து வந்திருக்குமா? ஆளுங்கட்சிகள் ஈஷாவுக்கும், காருண்யாவுக்கும் கொடி பிடிக்கிறார்கள் என்றால் அது தேர்தல் அரசியல். உங்களை நாங்கள் அவ்வாறு பார்க்கவில்லையே?

 4. வெள்ளலூர் குளத்தை நீங்கள் தூர்வாரியும் இன்னமும் தண்ணீர் வரவில்லை அதன் வழித்தடங்களில் நடந்துள்ள ஆக்மிப்புகள் பற்றியும் நீங்கள் பேசவில்லையே?

ஈஷாவும் காருண்யாவும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? 'சிறுதுளி'க்கு சில கேள்விகள்...5. நொய்யலாற்றின் இரண்டாவது முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக விளங்கும் தடாகம் பகுதி, சங்கனூர் பள்ளத்தின் நீர் ஆதாரப் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் மண் கொள்ளை பற்றி ஒரு வார்த்தையாவது நீங்கள் பேசியிருப்பீர்களா?

6. கோவையில் உள்ள குளங்களில் லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீரை நேரடியாகக் கலக்கவிடும் கோவை மாநகராட்சியை நீங்கள் விமர்சித்தது உண்டா?

7. உக்கடம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக மேம்பாலம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குளத்தின் மீது மேல்சாலை அமைக்க உதவி செய்தீர்கள். காரணம், குளத்தின் கீழ் அமைந்துள்ள தொழிலதிபர்களைக் காப்பாற்றத்தானே?

7. வாலாங்குளத்தில் ஆக்கிரமிப்பு எனச் சொல்லி குடிசை வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்கிறீர்கள். அவர்களை மட்டும்தான் அப்புறப்படுத்த வேண்டுமா? அருகில் உள்ள பெரும் நிறுவன கட்டடங்களை என்ன செய்வது?

8, ஆலந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பதியில் முண்டந்துறை அணைக்கட்டின் கரையிலேயே 'தாமரா' என்ற பெயரில் ரிசார்ட் ஒன்று கட்டப்பட்டுள்ளதே... அது உங்கள் கவனத்திற்கு வரவில்லையா? முன்பிருந்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அந்தக் கட்டடத்திற்கு அனுமதியை மறுத்தாலும்,  இப்போது மீண்டும் கட்டடம் வந்துவிட்டதே? இதற்கு ஒரு சிறு முணுமுணுப்பையாவது நீங்கள் சொல்லியிருப்பீர்களா?

நொய்யல் வழித்தடங்களில் இருந்து அகற்றப்பட வேண்டியது குப்பைகள் மட்டும்தானா? கடந்த பல ஆண்டுகளாக நொய்யல் ஆற்றின் சராசரி நீரோட்டத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அதற்கான காரணங்களை அலசி ஆராயுங்கள். வாரம்தோறும் குளங்களை மீட்கிறோம் என்ற பெயரில்,  தொப்பிகளை அணிந்து கொண்டு பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதை விடவும், கண்முன்னால் களையப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன. ஆற்று வளங்களை அரசியல் கட்சிகள் கூறுபோட்டு விற்பதால்தான் உங்களை நம்பினோம்.

நீங்களும் சராசரியான தொழிலதிபர் என்பதை நிரூபிக்காமல், கோவையில் வளத்தைக் காப்பாற்ற 'சிறுதுளி'யேனும் முயற்சி எடுங்கள்.

நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்.

அடுத்த கட்டுரைக்கு