Published:Updated:

'வியாபாரிகளை சிரமப்படுத்தாதீர்கள்...!'- அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

'வியாபாரிகளை சிரமப்படுத்தாதீர்கள்...!'- அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
'வியாபாரிகளை சிரமப்படுத்தாதீர்கள்...!'- அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

'வியாபாரிகளை சிரமப்படுத்தாதீர்கள்...!'- அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: பணம் கொண்டு செல்லும் பொதுமக்களையும், வியாபாரிகளையும் சிரமப்படுத்தக் கூடாது என்று பொறுப்பு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு துணை கலெக்டர் தகுதியில் பொறுப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்றது.

வாகன சோதனையின்போது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அரசியலுக்கு அல்லாத பணிகளுக்கு பணம் கொண்டு சென்றால் அதை சரிபார்த்து திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம். ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கான ஆதாரங்களை வைத்திருந்தால் அதையும் திருப்பி கொடுத்துவிட வேண்டும்.

ரூ.10 லட்சத்துக்கு மேல் பிடிபட்டால் அந்தந்த மாவட்ட வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியுள்ளோம். எனவே பணம் கொண்டு செல்லும் பொதுமக்களையும், வியாபாரிகளையும் சிரமப்படுத்தக் கூடாது என்று பொறுப்பு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்.

வாகன சோதனையின்போது பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்யும்போதும், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்போதும் அந்த வீடியோ காட்சிகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் எனது செல்போனில் தெரியும். பறிமுதல் செய்த பணத்தை திருப்பி கொடுக்கும்போது அதுபற்றிய படிவத்தை பூர்த்தி செய்து பறக்கும் படையினர் கொடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் 116 முதியோர் இல்லங்கள் செயல்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களை வாக்காளர் பட்டியில் சேர்ப்பதற்கான முகாம்கள் வருகின்ற 25-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வரை நடத்தப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு