என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

இவர்களின் மறுபக்கம்!

இர.ப்ரீத்திபடங்கள் : தி.விஜய், ச.இரா.ஸ்ரீதர்

கௌரி

இவர்களின் மறுபக்கம்!

''ஆக்ச்சுவலா... நான் அழகியா இருந்தாலும் ஓர் அழகுக் கலை நிபுணரும்கூட! பியூட்டீஷியன் கோர்ஸ் படிக்கத்தான் சென்னைக்கே வந்தேன். ஆனா, கோர்ஸ் முடிச்ச கையோடு காம்பியரிங் வாய்ப்பு கிடைச்சதால், மேக்கப் பேக்கப். 'படிச்ச படிப்பை வீணாக்காதே’னு நண்பர்கள் சொன்னதால, என் சொந்த ஊரான திருப்பூர்லயே ஒரு பியூட்டி பார்லர் தொடங்கிட்டேன். இப்போ சென்னைக்கும் திருப்பூருக்கும் சீஸன் டிக்கெட்ல ஓடிட்டு இருக்கேன். என் பார்லர் பேரு 'கௌலா நேச்சர் ப்ரைட்’ நல்லா இருக்கா?''

ஆர்த்தி

இவர்களின் மறுபக்கம்!

''நான் எம்.ஏ., பிசினஸ் எகனாமிக்ஸ் ஸ்டூடன்ட். இப்போ ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்த்துட்டு இருக்கேன். சும்மா ஜாலியா ஜல்லி அடிச்சுட்டு இருந்த நான், இப்போ சீரியஸா ஃபைல்ஸ்லாம் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். நம்புங்கப்பா... நாங்களும் வேலைக்குப் போறோம்!''

கமலேஷ்

இவர்களின் மறுபக்கம்!

'' 'மஸ்தானா மஸ்தானா’, 'ஜோடி நம்பர் ஒன்’னுனு தொடர்ந்து டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டதுனாலயோ என்னவோ, நடனம் மேல இப்போ ஆர்வம் அதிகம் ஆகிருச்சு. அதான் 'கேம் க்ரூஸ் அகாடமி ஆஃப் டான்ஸ்’னு ஒரு டான்ஸ் ட்ரூப் ஆரம்பிச்சு புரொஃபஷனல் பயிற்சியாளர்கள் வெச்சு நடத்திட்டு வர்றேன். குழந்தைங்க, பெரியவங்க, ஐ.டி. பணியாளர்கள்னு பலரும் வர்றாங்க. பத்தாததுக்கு என் மனைவி சிந்து அங்கேயே பெயின்ட்டிங், டிராயிங் கத்துக் கொடுக்குறா!''

ரஜினி

இவர்களின் மறுபக்கம்!

''ஹெச்.சி.எல். வேலை, மிஸ்.சின்னத்திரை, டான்ஸர்னு எக்கச்சக்க ரவுண்ட் அடிச்சாலும், ஃபேஷன் டிசைனிங்கில் எனக்குத் தனி ஆர்வம். எனக்கு நானே காஸ்ட்யூம் டிசைன் பண்ணத் துவங்கி, இப்போ நிறைய வி.ஜே, டான்ஸர்களுக்கு நான்தான் காஸ்ட்யூம் டிசைனர். முறையா படிக்கலை. ஆனாலும், ஆர்வம் காரணமா தினம் புது விஷயங்களைக் கத்துக்கிறேன். மாடல் வெச்சு போட்டோ ஷூட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டேன். கூடவே பிள்ளையார், சாய்பாபா படங்களை வரைய ஆரம்பிச்சிருக்கேன். கூடிய சீக்கிரத்தில் ஒரு ஆர்ட் எக்ஸிபிஷன் நடத்துற ஐடியாவும் இருக்கு!''

காவ்யா

இவர்களின் மறுபக்கம்!
இவர்களின் மறுபக்கம்!

''சின்ன வயசுல அடுத்தவங்க பாடுறதைக் கேட்டு, ஒரு ஆர்வத்தில் நானே பாட ஆரம்பிச்சேன். ஒரு கல்யாண வீட்டில் பாட்டுக் கச்சேரி நடந்தப்ப, நானும் உற்சாகத்தில் கூட சேர்ந்து பாடி ஆடினேன். அது அப்படியே பழக்கம் ஆகிடுச்சு. நான் எங்கே பாடினாலும் எல்லோரும் ரசிச்சாங்க. அந்த ஊக்கம் தந்த ஆர்வம்தான் தொகுப்பாளினி, நடிகைனு என்னை அடுத்தடுத்து கூட்டிட்டுப் போகுது. இப்போ நிறைய மேடைக் கச்சேரிகள் பண்ணிக் கொடுக்குறேன். சாப்பாடு இல்லைன்னாகூட சமாளிச்சிருவேன். ஆனா, என்னால பாடாம இருக்க முடியாது!''