வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (07/04/2016)

கடைசி தொடர்பு:19:38 (07/04/2016)

ஐரோப்பிய நாடுகளுக்கு டூர் போறீங்களா... உஷார் உஷார்!

டந்த இரு ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வது 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், இங்கே சுற்றுலா செல்லும் இந்தியர்களில் சுமார் 30% பேர்,  தங்களின் உடமைகள் திருட்டு போயிருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தகவலை இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் மற்றும் சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, கிரீக் நாடுகளில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆசிய நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இந்த திருட்டு சம்பவங்கள் மிகக் குறைவாக உள்ளன.

ஐரோப்பாவில் சுற்றுலா பயணிகளிடம் அதிக திருட்டு நடக்க காரணம், அந்த நாட்டில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்தான். ஐரோப்பாவில் உள்ள இத்தாலி, கிரீக் நாடுகளின் கடன் சுமை அதிகரித்ததால், அந்த நாட்டு அரசுகளால் சரியாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நாடுகள், இதர நாடுகளிடமிருந்து வாங்கிய கடன்களை திருப்பி செலுத்துவதில் சிக்கலை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், ஐரோப்பிய நாட்டு கரன்சியான யூரோவின் மதிப்பு குறைந்துள்ளது. இதனால், சுற்றுலா செலவு கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில்தான் இந்தியர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு  சுற்றுலா செலவது அதிகரித்துள்ளது.

இந்த நாடுகளுக்கு செல்லும்போது சுற்றுலா இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதால்,  இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் இது குறித்து கவலைக் கொள்வதில்லை என்கிறார்கள், விவரம் தெரிந்தவர்கள். அதேநேரத்தில்  க்ளைம் அதிகரிக்கும் போது, அடுத்து வரும் ஆண்டுகளில் இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது, இந்தியர்கள் அதிகம் பிரீமியம் கட்டும் சூழ்நிலை உருவாகும்.

-சி.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க