Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

தகத்தாய தன்னடக்கம்!

நானே கேள்வி... நானே பதில்!

தகத்தாய தன்னடக்கம்!

Published:Updated:
##~##

''தன்னடக்கத்துக்கு ஓர் உதாரணம்?''

 ''ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் பல முறை ஆஜராகி சாட்சியம் அளித்து, கைதும் ஆகிவிட்டார். இத்தகைய 'சிறப்பு’டைய வழக்கில், மிகவும் தன்னடக்கத்தோடு விளம்பரம் தேடாமல், அதுபற்றி சிறு செய்திகூட வராமல் பார்த்துக்கொண்டதே கலைஞர் டி.வி. அதுதான் தகத்தகாய தன்னடக்க உதாரணம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

''சமீபத்தில் கண் கலங்கவைத்த சம்பவம்?''

''கோவை பீளமேடு மசக்காளி பாளையத்தைச் சேர்ந்தவர்கள் தர்மராஜும் சங்கீதாவும். இருவரும் பஞ்சு குடோனில் கூலி வேலை செய்து வந்தார்கள். இவர்களது மகன் ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. முடித்துள்ளான். முதல் வகுப்பில் சேர்க்க அந்தத் தனியார் பள்ளி

நானே கேள்வி... நானே பதில்!

12,000 கட்டணம் கேட்டுள்ளது. ஒருவழியாக இருவரும் சேர்ந்து

நானே கேள்வி... நானே பதில்!

5,000 வரை சேமித்துவிட்டனர். ஆனால், பள்ளிக் கட்டணம் கட்ட கால அவகாசம் குறைவாக இருந்ததால், சங்கீதா தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இந்தியா வல்லரசு ஆவதுபற்றி வாய் கிழியப் பேசுபவர்கள், சங்கீதாவின் அக்கினிக் கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும்!'

- மா.மணிமொழி, மதுரை.

''இந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் கருணாநிதி வீழ்ந்துவிடுவாரா என்ன?''

''தமிழகத்தில் இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களிலேயே மிக அதிகமான அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்தவர் கருணாநிதிதான். அதிகமான அளவுக்குக் கட்சிப் பிளவுகளைச் சந்தித்த இயக்கமும் தி.மு.க-தான். ஆனால், அதை எல்லாம் சாமர்த்தியமாகச் சமாளித்தவர் மு.க. குறிப்பாக, இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலை காலகட்டத்தின்போது, முக்கியமான தி.மு.க. தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 'யார் கைது செய்யப்பட்டார்கள்?’ என்பதை அறிவிக்க முடியாத அளவுக்கு பத்திரிகை தணிக்கையும் இருந்தது. அப்போது அண்ணாவின் நினைவு நாள் வந்தது. 'அண்ணாவின் நினைவு நாள் அன்று அஞ்சலி செலுத்த முடியாதவர்கள்’ என்று கலைஞர் 'முரசொலி’யில் ஒரு பட்டியல் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் இருந்தவர்கள்தான் கைதானவர்கள். இப்படிப் பல நெருக்கடிகளைச் சமாளித்தவர். ஒவ்வொரு தேர்தல் தோல்வியின்போதும் அது குறித்த நீண்ட அறிக்கையை வெளியிடுவார். ஆனால், இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, 'மக்கள் எனக்கு

நானே கேள்வி... நானே பதில்!

ஓய்வு அளித்துவிட்டார்கள்’ என்பதைத் தாண்டி, கருணாநிதியிடம் இருந்து எந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை. 'இது தி.மு.க-வின் தோல்வி அல்ல, மக்களின் தோல்வி’ என்று கருணாநிதி சொல்ல வேண்டிய வார்த்தைகளை குஷ்பு சொல்லும் அளவுக்கு தி.மு.க-வும் பலவீனம் ஆகிவிட்டது!''

- பா.குமணன், தேனி.

''புதுவை முதல்வர் ரங்கசாமி கூட்டணிக்குத் துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கோபப்பட்டு இருக்கிறாரே?''

''ஜெயலலிதா வைகோவுக்குச் செய்ததற்குப் பெயர் என்னவாம்?''

- ஆ.நாஞ்சில் வளவன், நாகர்கோயில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism