Published:Updated:

ட்விட்டரில் டூப்ளிகேட் விஜயகாந்த் என்ன செய்கிறார்?

ட்விட்டரில் டூப்ளிகேட் விஜயகாந்த் என்ன செய்கிறார்?
ட்விட்டரில் டூப்ளிகேட் விஜயகாந்த் என்ன செய்கிறார்?

ட்விட்டரில் டூப்ளிகேட் விஜயகாந்த் என்ன செய்கிறார்?

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் இயங்கும் ஐ.டி. ஒன்றில் பதிவேற்றப்படும் கமெண்ட்டுகள், சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நேற்று (ஞாயிறு) தேமுதிக தலைவர் விஜயகாந்த், ட்விட்டரில் தனது ஃபாலோயர்ஸூடன் ஒருமணிநேரம் உரையாடினார். அப்போது,அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உடனுக்குடன் விஜயகாந்த் பதில் 'ட்விட்' செய்து பரபரப்பூட்டினார். அத்தோடு மீண்டும் அடுத்த ஞாயிறு சந்திப்போம் என்றும் அவர் பதிவிட்டு பின் தொடர்வோரை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

மேலும் அவர் தனது பதிவுகளில், "வைகோ ஹீரோ. வில்லன் கருணாநிதி. வில்லி ஜெயலலிதா.என்றும், 'எதிர்காலம் இளைஞர்கள் கையில், வலைத்தளங்கள் வாயிலாக உங்களுடன் உரையாடியதில் சந்தோஷம். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உரையாடுவேன். நேரம் மட்டும் விரைவில் சொல்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் விஜயகாந்த் பெயரிலேயே இரண்டு ஃபேக் ஐடிகள் இருக்கின்றன என்றும், அதில் அவரைப்போலவே உரையாடப்பட்டு வருகிறது என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அது உண்மையா என்று ட்விட்டர் பக்கத்தை  ஆராய்ந்து பார்த்ததில் இரண்டு ஃபேக் அக்கவுண்ட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும்  சில நூறு பேர் மட்டுமே அந்த அக்கவுன்ட்டை பின் தொடருகிறார்கள் என்றாலும், அதில் பதிவிடப்படும் கருத்துக்கள் ஆபாசமாகவும், பொறுப்பில்லாத கருத்துக்களாகவும் இருக்கின்றன. இதனால் இது விஜயகாந்தாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் ட்விட்டர் வாசிகள்.

ஆனால்,இதை அறியாத பலர் விஜயகாந்த்தான் தம்முடன் உரையாடுகிறார் என்று கருதி,பல்வேறு சமூக அக்கறையோடு கேள்விகளைப் பதிவிட்டு பதிலுக்காக காத்துள்ளனர்.

சினிமாவில் கூட தனக்கு என்று சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த  விஜயகாந்த்,  ட்விட்டரில் மட்டும் டூப்ளிகேட் இயங்க எப்படி அனுமதிக்கிறார்?         

அடுத்த கட்டுரைக்கு