Published:Updated:

மே 9 சூரியனுக்கும் புதனுக்கும் மீட்டிங்! மிஸ் பண்ணிராதீங்க

மே 9 சூரியனுக்கும் புதனுக்கும் மீட்டிங்! மிஸ் பண்ணிராதீங்க
மே 9 சூரியனுக்கும் புதனுக்கும் மீட்டிங்! மிஸ் பண்ணிராதீங்க

மே 9 சூரியனுக்கும் புதனுக்கும் மீட்டிங்! மிஸ் பண்ணிராதீங்க

மே 9 சூரியனுக்கும் புதனுக்கும் மீட்டிங்! மிஸ் பண்ணிராதீங்க

10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யம்பெருமாள், புதன்கோள் சூரியனின் முன் நகரும் அரிய நிகழ்வு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதனை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம். புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.

இந்த நிகழ்வை பார்ப்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கில் 4 தொலைநோக்கி கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புதன்கோள் சூரியனை கடக்கும் நிகழ்வை வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காணலாம். இந்தியாவில் சூரியன் மறையும்போது இந்த நிகழ்வை காணமுடியும். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்க நாடுகளில் சூரிய உதயம் ஆகும்போது காணமுடியும்.

இந்தியாவில் 1999ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி, 2003ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி, 2006ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இந்த அரிய நிகழ்வு நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அரிய நிகழ்வு நடக்கிறது.

ஒரு நூற்றாண்டுக்கு 8 முறைதான் புதன்கோள் சூரியனை கடந்து செல்லும். அடுத்து 2019ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி இந்த நிகழ்வை காணலாம். அதன் பின்னர் 2032ம் ஆண்டு நவம்பர் 13தேதி தான் புதன்கோள் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும் என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு