Published:Updated:

ஆந்திராவுக்குச் சென்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழகத்தில் மழை குறையும்! -வானிலை மையம்

ஆந்திராவுக்குச் சென்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழகத்தில் மழை குறையும்! -வானிலை மையம்
ஆந்திராவுக்குச் சென்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழகத்தில் மழை குறையும்! -வானிலை மையம்

சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆந்திர கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.

இதுகுறித்து பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக ஆந்திர கடல் பகுதியில் நிலைக் கொண்டுள்ளது. நெல்லூருக்கு கிழக்கே 140 கி.மீ தொலைவில் அது உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.

மேலும், அது வடக்கு மற்றும் வடகிழக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை, ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்.

வடதமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை சாரல் மழையும் சில சமயங்களில் மழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. வடதமிழகம் மற்றும் ஆந்திர பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்" என்றார்.