Published:Updated:

ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் 'எஜுதர்மா'!

ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் 'எஜுதர்மா'!
ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் 'எஜுதர்மா'!

ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் 'எஜுதர்மா'!

ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் 'எஜுதர்மா'!

ருவரின் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி. அதைக் கற்பதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் அமைந்துவிடுகிறதா... அப்படியே அமைந்தாலும் அவர்களால் முழுக் கல்வியையும் பெற முடிகிறதா? பணமே பிரதானமாகிப்போன  இன்றைய சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு, காலச் சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கை கொடுத்துவருகிறது கோவையைச் சேர்ந்த 'ஸ்பைஸ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு.  இந்த அமைப்பின் ஒரு பிரிவாகத் தொடங்கப்பட்டதுதான் (edudharma) 'எஜுதர்மா'  கல்வி சேவை மையம்.

'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!' -  கல்வி கற்போருக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அதைத் தீர்ப்பதற்கு துணை நிற்க வேண்டும் என்பதே 'எஜுதர்மா' சேவை மையத்தின் கொள்கை. படிப்பைத் தொடர முடியாமல் பரிதவித்து நிற்கும் மாணவர்களுக்கு 'எஜுதர்மா' செய்துவரும் உதவிகள் குறித்து, அந்த அமைப்பின் செயற்பாட்டாளர் பாலாஜியிடம் கேட்டோம்.

" பல்வேறுவிதமான சமுதாயப் பணிகளைச் செய்துவருகிறது 'ஸ்பைஸ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு. இதன் உட்பிரிவுகளாக `நோ ஃபுட் வேஸ்ட்', `ஸ்பைஸ் டெக்னாலஜி',` டோட்டல் வேஸ்ட் மேனேஜ்மென்ட்', `ஸ்டெம் எஜுகேஷன்', `நோ டப்ம்பிங்', `டாய்லெட் ஃபர்ஸ்ட் டாட் இன்', `ஐ வி கோ', `யூ தீட்டா'  என பல்வேறுவிதமான சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் `எஜுதர்மா' (Edudarma) . பொருளாதார நிலை காரணமாக ஒவ்வொரு வருடமும், இந்தியாவில் 12 சதவிகித மாணவர்கள் கல்லூரியை முதல் வருடமே கைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கல்வி கற்க விரும்பி, அதற்கான வாய்ப்புகள் அமையாமல் இருப்போரையும், கல்வியைத் தொடர்ந்து கற்க முடியாத சூழ்நிலையில் இருக்கக்கூடிய கல்விக் கலைமான்களையும் கரை சேர்ப்பதே 'எஜுதர்மா' சேவை மையத்தின் பிரதான பணி.

ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் 'எஜுதர்மா'!

வறுமையின் பிடியிலும், குடும்பம் மற்றும் பல்வேறுவிதமான சூழ்நிலைகளின் பிடியிலும் சிக்கித்தவிக்கும் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை தற்போது செய்துவருகிறோம். கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தச் சேவை மையத்தின் மூலம்,  இந்தியா முழுவதும் உள்ள படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கு உதவி செய்துவருகிறோம். இந்த அமைப்பின் பிரதான பணியாளர்களாக சுமார் 15 பேர் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் இவர்களோடு இணைந்து சமுதாயப் பணியாற்றிவருகிறார்கள். இதுவரை 21 மாணவர்களுக்கு பொருள் உதவியோடு, அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும் முழுமையாகச் செய்துகொடுத்துள்ளோம்.

இதில் மாற்றுத்திறனாளிகள் மூன்று மாணவர்களும் உள்ளனர். அவர்களுக்கான உதவித்தொகையை மக்களிடம் இருந்தே வசூலித்து, உதவி தேவைப்படும் மாணவர்களின் உண்மை நிலை, தேவை மற்றும் ஈடுபாடு போன்ற தேவைகளைச் சீர்தூக்கிப் பார்த்தப்பிறகே, வேண்டிய உதவிகளைச் செய்கிறோம். உதவிப் பெற்ற மாணவர்களின் எதிர்காலம் குறித்த ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஒரு நபர் குறைந்தபட்சம் பத்து ரூபாய் உதவித்தொகையாகத் தரலாம். இதற்கான வரிவிலக்காக 80G-யின்படி வருமான வரி விலக்குத் தரப்படுகிறது. மக்கள் தரக்கூடிய தொகையை முழுவதுமாக அந்த மாணவருக்கு வழங்குவதே 'எஜுதர்மா' வின் சிறப்பு.

இன்றைய மாணவர்கள் மேல் படிப்பு படித்தப் பிறகு, எந்தப் பிரிவு பாடத்தைத் தேர்ந்தெடுப்படுப்பது என்பதில் மிகவும் தடுமாறுகிறார்கள். மேல்நிலைப் படிப்பை முடித்து வெளிவரும் மாணவர்கள்,  'அடுத்து எந்தப் பாடம் படிப்பது, தன் திறனுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா, எந்தெந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளன' போன்றவற்றை பற்றி ஆலோசிக்கும்விதமாக தனிப்பட்ட முறையில் 'சைக்கோ மெட்ரிக் டெஸ்ட்' எனச் சொல்லக்கூடிய ஒரு தேர்வு நடத்துகிறோம். இதில் கிடைக்கக்கூடிய அவர்களின் பதில்களின் அடிப்படையில்,  அந்த மாணவர்களுக்கு எந்த வகையான பாடம் பொருந்தும் என்பதை அவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி வருகிறோம். இதை இன்னும் சிறப்பான முறையில் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொண்டுவருகிறோம்.

ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் 'எஜுதர்மா'!

ரோட்டரி கிளப், லைன்ஸ் கிளப் போன்ற சமுதாயப் பணியாற்றக்கூடிய என்.ஜி.ஓ அமைப்புகளை ஒன்றுதிரட்டி, கல்வி உதவித்தொகை தேவைப்படக்கூடிய மாணவர்களுக்கு உதவி வருகிறோம்.
அனைத்து பாடப் பிரிவுகளின் மீதான தொலைநோக்குப் பார்வை கொண்ட டேட்டா அனாலிசஸ் குழுவை அமைப்பதற்கான திட்டம் இருக்கிறது. இவை அனைத்தும், மேலும் சிறப்பான முறையில் செயல்படுவதற்கான முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்'' என்று எஜுதர்மாவின் சேவைகளைப் பற்றி சிறிய அளவில் கூறிவிட்டு, வீரியத்தோடு களப்பணியாற்றக் கிளம்பினார் பாலாஜி.


கல்வியில் மேம்பட உதவ நினைப்பவர்களையும், உதவி தேவைப்படுவோர்களையும் இணைக்கும்  பாலமாக இருக்கும் 'எஜுதர்மா'-விடம் உதவி வேண்டி வரக்கூடிய பள்ளி/கல்லூரி மாணவர்கள், குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று இருக்கவேண்டும். கல்விக்காக உதவிசெய்வோரின்  எண்ணிக்கை 450 பேருக்கு மேல் உயர்ந்துள்ளது. ஆனாலும் நிதி மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்வி கற்க திணறும் மாணவர்களின் எண்ணற்ற குரல்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

உங்களால் முடியும்... உதவிகள் மூலம் உரிய மாணவர்களை உயர்த்த, உங்களால் முடியும்.

'எஜுதர்மா' பற்றி முழு விவரம் தெரிந்துகொள்ள www.edudharma.com  என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

- பாசுமணி, கே.அபிநயா

அடுத்த கட்டுரைக்கு