Published:Updated:

நகைக்கடைக்குள் புகுந்து 10 ஆயிரம் ரூபாய் கட்டை தூக்கிச் சென்ற குரங்கு (வீடியோ)

விகடன் விமர்சனக்குழு
நகைக்கடைக்குள் புகுந்து 10 ஆயிரம் ரூபாய் கட்டை தூக்கிச் சென்ற குரங்கு (வீடியோ)
நகைக்கடைக்குள் புகுந்து 10 ஆயிரம் ரூபாய் கட்டை தூக்கிச் சென்ற குரங்கு (வீடியோ)

ஐதராபாத்: நகைக்கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று 10 ஆயிரம் ரூபாய் கட்டை எடுத்துச் சென்ற வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.

ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள ஒரு நகைக்கடைக்குள் குரங்கு ஒன்று புகுந்திருக்கிறது. அங்கும், இங்குமாக தாவிய அந்த குரங்கு, இறுதியாக பணம் வைத்திருக்கும் மேஜையின் முன்பு இருந்த நாற்காலிக்கு தாவுகிறது.

சற்று நேரம் நாற்காலியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த குரங்கு, திடீரென மேஜையின் டிராயரை திறந்து உள்ளே பார்க்கிறது. அங்கு நிறைய பணம் வைக்கட்டிருக்கிறது.

அதைப் பார்த்த குரங்கு திடீரென 10 ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பிக்கிறது. இதை பார்த்த கடை ஊழியர் ஒருவர் கையில் கொய்யாப் பழத்தை குரங்கிடம் காட்டி பிடிக்க முயல்கிறார். ஆனால், குரங்கு பிடிபடாமல் தப்பி ஓடி விடுகிறது.

இந்த காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதவாகியுள்ளது.

இதற்கிடையே, அந்த குரங்கு தற்செயலாக வந்து பணத்தை எடுத்துச் சென்றதா? அல்லது திருடர்களால் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கின் செயலா? என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது.

வீடியோ காண இங்கே கிளிக் செய்யவும்...