Published:Updated:

புதுச்சேரியை வியக்கவைக்கும் கிரண்பேடி..! துப்புரவாளர்களுடன் கைகோத்தார் (வீடியோ)

புதுச்சேரியை வியக்கவைக்கும் கிரண்பேடி..! துப்புரவாளர்களுடன் கைகோத்தார் (வீடியோ)
புதுச்சேரியை வியக்கவைக்கும் கிரண்பேடி..! துப்புரவாளர்களுடன் கைகோத்தார் (வீடியோ)

அண்மையில், புதுச்சேரி ஆளுநராக ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 'வாகனங்களில் சுழல் விளக்குகளை யாரும் பயன்படுத்தக்கூடாது, விஐபிகளுக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது' என்று அதிரடி உத்தரவை போட்டார் கிரண்பேடி.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தை சுத்தப்படும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். புதுச்சேரி, ஆம்பூர் சாலையில் துப்புரவு பணியாளர்களுடன் கடந்த ஞாயிறு அன்று சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது,  'கையில் உறை, முகத்தில் மாஸ்க் போடாமல் யாரும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடக்கூடாது' என அன்பு கட்டளையிட்டார்.

வீடியோ: ஜெ.முருகன்