Published:Updated:

`முதலில் பம்பர் லாட்டரி; இப்போ புதையல்!’- 66 வயது முதியவருக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்

ரத்னகரன் பிள்ளை
ரத்னகரன் பிள்ளை ( twitter )

நிலம் வாங்கிய நிலையில் சமீபத்தில் அங்கு மரவள்ளிக் கிழங்கு பயிரிட முடிவெடுத்த பிள்ளை இதற்காக நிலத்தில் குழிகளைத் தோண்டியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த கிளாமானூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் ரத்னகரன் பிள்ளை. முன்னாள் வார்டு உறுப்பினர். கடந்த கிறிஸ்துமஸ் லாட்டரியில் ரூ.6 கோடி பரிசாக கிடைத்தது. அப்போதே நியூஸ் பேப்பர், வலைதளங்கள் என வைரலாகப் பேசப்பட்டார் ரத்னகரன். இப்போதும் அதேபோல் மீண்டும் அதிர்ஷ்டத்தால் வைரலாகப் பேசப்பட்டுவருகிறார்.

கடந்த வருடம் பம்பர் லாட்டரியில் பரிசுத் தொகை கிடைத்ததை அடுத்து அந்தப் பணத்தில் நீண்ட நாள் கனவான விவசாயம் செய்ய வேண்டும் என்பதை அதன்மூலம் பூர்த்தி செய்ய நினைத்துள்ளார். அதன்படி, தன் ஊருக்கு அருகே சில கிலோமீட்டர் தள்ளி விவசாய நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் நிலம் வாங்கிய இடம் பழைமையான கிருஷ்ணர் கோயில் அருகே அமைந்திருக்கிறது.

ரத்னகரன் பிள்ளை
ரத்னகரன் பிள்ளை
twitter

நிலம் வாங்கிய நிலையில் சமீபத்தில் அங்கு மரவள்ளிக் கிழங்கு பயிரிட முடிவெடுத்த பிள்ளை இதற்காக நிலத்தில் குழிகளைத் தோண்டியுள்ளார். ஏற்கெனவே அதிர்ஷ்டத்தால் பம்பர் லாட்டரி அடித்த பிள்ளைக்கு இந்த முறை புதையல் கிடைத்துள்ளது. மரவள்ளிக் கிழங்கு பயிரிடுவதற்காக குழிகளைத் தோண்டியபோது மண் பானை ஒன்று கிடைத்துள்ளது. அதில் 100 ஆண்டுகள் பழைமையான நாணயங்கள் கிடைத்துள்ளன.

பிள்ளை கண்டுபிடித்த மண் பானையிலிருந்து மொத்தம் 2,595 பண்டைய நாணயங்கள் இருந்துள்ளன. மொத்த நாணயங்களும் 20 கிலோ 400 கிராம் எடை கொண்டதாக இருந்தது. பச்சை நிறமாக காட்சி அளிக்கப்பட்ட அந்த நாணயங்கள் திருவிதாங்கூரின் இரண்டு மகாராஜாக்களான ஸ்ரீ முலாம் திருனல் ராம வர்மா மற்றும் ஸ்ரீ சித்திரா திருனல் பால ராம வர்மா ஆகியவர்களின் ஆட்சியில் இருந்தவை எனக் கூறப்பட்டுள்ளது.

`புதையல்; போதையில் உளறல்; துப்பாக்கி முனையில் கொலை!’- கூலிப்படையுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி மகன்

புதையலை எடுத்தபின் பிள்ளை நேராக அருகில் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்துக்கு போலீஸும், தொல்பொருள் துறை ஆய்வாளர்களும் வந்து ஆய்வு நடத்தினர். கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. மொத்தம் நான்கு வகையாக இருந்த அந்த நாணயங்கள் அனைத்தும் வெள்ளி மற்றும் செம்பு வகைகளில் செய்யப்பட்டுள்ளன. புதையலை அரசிடம் ஒப்படைத்தாலும் இதற்காக ஒருபங்குத் தொகை அரசிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரத்னகரன் பிள்ளை
ரத்னகரன் பிள்ளை
twitter

புதையல் எடுத்தது குறித்து பிள்ளை செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நான் ஒரு மண் பானையை வெளியே எடுத்தேன். இதன் உள்ளே ஆயிரக்கணக்கான செப்பு நாணயங்கள் இருந்தன. அவை முந்தைய திருவிதாங்கூர் மன்னர் அரசில் இருந்த பண்டைய நாணயம் என்பதை பின்னர்தான் உணர்ந்தேன். புதையலின் மதிப்பையோ அல்லது அதைக் கண்டுபிடித்தற்காக எவ்வளவு கிடைக்கும் என்பதையோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எனது நிலத்திலிருந்து இந்தப் பழங்கால நாணயங்கள் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நான் அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்தேன். இப்போது அது அரசின் பாதுகாப்பில் உள்ளது'' என்று கூறியுள்ளார்.

`சேகர் ரெட்டிக்குப் பதவி, லட்டு அடுப்பு புதையல்?!' - திருப்பதி சந்தேகங்களுக்கு சுப்பா ரெட்டி பதில்
அடுத்த கட்டுரைக்கு