Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

'அம்மா'ற்றம் வேண்டும்!

நானே கேள்வி... நானே பதில்!

'அம்மா'ற்றம் வேண்டும்!

Published:Updated:
நானே கேள்வி... நானே பதில்!

''சட்டமன்றக் கட்டடம், மேலவை, சமச்சீர் கல்வி என்று தி.மு.க. அரசு கொண்டுவந்த எல்லாவற்றையும் ஜெயலலிதா மாற்றுகிறாரே?''

 '' 'மாற்றம் வேண்டும்’ என்று மக்கள் விரும்பியதை ஜெயலலிதா தவறாகப் புரிந்துகொண்டாரோ? மக்கள் விரும்பியது 'ஆட்சி மாற்றம் வேண்டும்’ என்பதை மட்டும் அல்ல, 'ஜெயலலிதாவிடமும் மாற்றம் வேண்டும்’ என்பதையும்தான். இன்னொரு விஷயத்தைக் கவனித்தீர்களா, ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி எதை மாற்றினாலும் டாஸ்மாக்கை மாற்றத் தயார் இல்லை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ரேணுகாதேவி, ஏற்காடு.

''ஈழத் தமிழருக்காக இந்தியா செய்யும் உதவிகள் நேரடியாகத் தமிழர்களிடம் வழங்கப்படாமல், இலங்கை அரசிடம் வழங்கப்படுவது ஏன்?''

''சிறுமி ஒருத்தி பூனைக் குட்டிக்கு நெல்மணிகளைத் தின்னக் கொடுத்துக்கொண்டு இருந்தாள். அதைப் பார்த்த அவள் தாய், 'பூனைக்கு எதற்கு நெல்மணிகள் கொடுக்கிறாய்?’ என்று கேட்டார். அதற்கு சிறுமி சொன்னாள், 'அம்மா, பூனை வயிற்றுக்குள்தானே கிளி இருக்கிறது?’ அப்படித்தான் இருக்கிறது இப்போது இலங்கையின் நிலை!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

##~##

''படு தோல்வி அடைந்துவிட்டதே, இனியாவது காங்கிரஸ் மாறுமா?''

''அடப் போங்க சார்! காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்றத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது, கொறடாவாக யாரைத் தேர்ந் தெடுப்பது என்பது குறித்து ஆலோசிக்க, சமீபத்தில் தங்கபாலு தலைமையில் கூட்டம் கூடியது. கடைசியாக எடுத்த முடிவு என்ன தெரியுமா? 'சட்டமன்றத் தலைவர், கொறடா ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் சோனியா வுக்கே’ என்பதுதான். காங்கிரஸுக்கு மொத்தம் இருப்பதே 5 எம்.எல்.ஏ-க்கள். இதில் இரண்டு பேரைப் பொறுப்பில் தேர்ந்தெடுப்பதற்கு, டெல்லியைத் தேடி ஓடும் தமிழகக் காங்கிரஸ் எப்படி மாறும்?''

- மலர்விழி, சேலம்.

''சமயங்களில் சினிமாக்களைவிட, தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றனவே?''

''உண்மைதான். ஆனால், 'தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் 40 சதவிகிதம் குழந்தைகளைத்தான் குறிவைக்கின்றன’ என்கிறது ஓர் ஆய்வு. சோப்புத் தூள், பேஸ்ட், மிளகாய்த் தூள் என்று எல்லா விளம்பரங்களையும் கவனித்தால் இது தெரிய வரும். இந்த விளம்பரங்களைப் பார்த்துப் பழகும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் இந்தப் பொருட்களைத்தான் வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. நுகர்வுக் கலாசாரத்துக்கு நம்மை அடிமையாக்குவது மட்டும் இல்லாமல், எதிர்கால அடிமை களையும் உருவாக்கும் ஆபத்து இது. பாராட்டுவதற்கு முன் இதையும் சேர்த்து யோசியுங்கள்!''

- சிவசக்தி, நாமக்கல்.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism