Published:Updated:

பகலில் ஆட்டோ டிரைவர்... இரவில் கிரில் கொள்ளையன்! - (Exclusive வீடியோ)

பகலில் ஆட்டோ டிரைவர்... இரவில் கிரில் கொள்ளையன்! - (Exclusive வீடியோ)
பகலில் ஆட்டோ டிரைவர்... இரவில் கிரில் கொள்ளையன்! - (Exclusive வீடியோ)

பகலில் ஆட்டோ டிரைவர்... இரவில் கிரில் கொள்ளையன்! - (Exclusive வீடியோ)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பகலில் ஆட்டோ டிரைவர்... இரவில் கிரில் கொள்ளையன்! - (Exclusive வீடியோ)

சென்னையை கலங்கடித்த கிரில் கொள்ளையன் ஸ்வோட்டிங் வெங்கடேசனை, போலீஸார் கைது செய்துள்ளனர். பகலில் ஆட்டோ டிரைவராகவும், இரவில் கிரில் கொள்ளையனாகவும் வெங்கடேசன் செயல்பட்டுவந்ததும் தெரியவந்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிரில் கேட், ஜன்னலை சப்தமில்லாமல் திறந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்தன. இதுகுறித்து பல காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிரில் கொள்ளையனைப் பிடிக்க சென்னை கூடுதல் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் அபினேவ் குமார் ஆகியோர் மேற்பார்வையில், சாஸ்திரி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரும், தனிப்படை பிரிவை சேர்ந்தவருமான சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், மோகனசுந்தரம், ஏட்டு தாமோதரன் மற்றும் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு,   கிரில் கொள்ளையனைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில்  இன்று பிற்பகல், திருவான்மியூர் 4வது மெயின் ரோட்டில் நடந்து சென்ற, பெசன்ட் நகரைச் சேர்ந்த துரை என்பவரை தாக்கி வழிப்பறி செய்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞரை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். பிறகு அவரை சாஸ்திரி நகர் போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், சென்னையை கலங்கடித்த கிரில் கொள்ளையன் ஸ்வோட்டிங் வெங்கடேசன் என்பது தெரியவந்தது. ஸ்வோட்டிங் என்பது வெங்கடேசனின் பட்டப்பெயர். கோலி விளையாட்டில், ஸ்வோட்டிங் ஆடுவதில் இவர் கில்லாடி என்பதால், அதே பெயர் அவருக்கு நண்பர்களால் சூட்டப்பட்டதாம்.

போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில், "பிடிபட்ட வெங்கடேசன் ஆட்டோ டிரைவர். ஆட்டோவில் பயணிகளை சவாரி அழைத்து செல்லும் இடங்களை நோட்டமிடுவார். பிறகு அந்த வீடுகளில் இரவு நேரத்தில் கிரில் கேட்களையும், கிரில் ஜன்னல்களையும் சப்தமில்லாமல் திறந்து கொள்ளையடித்து விட்டு,  பெங்களூரு தப்பிச் சென்று விடுவார். திருவான்மியூர், நீலாங்கரை, அம்பத்தூர், நொளம்பூர் ஆகிய பகுதிகளில் கொள்ளையடித்ததாக வெங்கடேசன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சேலையூரில் 12 இடங்களிலும், கொரட்டூரில் 6 இடங்களிலும், திருமங்கலத்தில் 5 இடங்களிலும் கொள்ளையடித்துள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கொள்ளையடித்த நகை, பணம் ஆகியவற்றை பெங்களூரில் உள்ள பிரபல ரவுடி ஏ.டி.எம் குமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஏ.டி.எம் குமார், நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர். மளிகை கடை நடத்தி வந்தார். பிறகு  ஏ.டி.எம். கார்டுகள், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகளை போலியாக தயாரித்து மோசடி செய்த வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருக்கும் ஏ.டி.எம் குமார், அவரது மனைவி செல்வி மற்றும் கூட்டாளி மகாராஜா ஆகியோருடன் கிரில் கொள்ளையன் வெங்கடேசனும் சேர்ந்து பல கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ள தகவல் தெரியவந்துள்ளது. இதனால் தனிப்படை போலீஸ் டீம், பெங்களூரு விரைந்துள்ளது" என்றனர்.

இதற்கிடையே தனிப்படை போலீசுக்கு, கிரில் கொள்ளையன் வெங்கடேசன், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டில் கொள்ளையடிக்க செல்லும் வீடியோக் காட்சி கிடைத்துள்ளது. அதில் சர்வசாதாரணமாக நடந்து வரும் வெங்கடேசன், அக்கம் பக்கத்தில் ஆட்கள் வருகிறார்களா என்று நோட்டம் பார்த்து விட்டு,  கொள்ளையடிக்க காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிக்கும் காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வியில் பதிவாகி இருக்கிறது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது என்கிறது போலீஸ் டீம்.

ஏ.டி.எம் குமார், தற்போது பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசாக குடும்பத்துடன் வாழ்கிறார். அங்கு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார். இதனால் வெங்கடேசனுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை கொடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், கொள்யைடித்த பணம், நகையை குமாரிடம் கொடுத்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது. மேலும், கொள்ளையடித்த பணத்தில் வெங்கடேசன் சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்துள்ளார்.


- எஸ்.மகேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு