Published:Updated:

வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை: பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு!

வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை: பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு!
வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை: பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு!

வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை: பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு!

வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை: பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு!

மும்பை: தொடர் கனமழையால் மும்பை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. பஸ், ரயில் போக்குவரத்து முடங்கிய நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை வட மாநிலங்களில் தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக உத்தரபிரதேசம், பீகார், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களிலும், அசாம், மேகாலயா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மும்பையில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பெய்து வந்த மழை, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மதியம் வரை இடைவிடாமல் கனமழையாக வெளுத்து வாங்கியது. இதனால் மும்பை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.

வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை: பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கிழக்கு மற்றும் மேற்கு விரைவு சாலையிலும் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால், மேற்கு விரைவு சாலையில் வாகனங்கள் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் இடுப்பளவிற்கு மேல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் பேருந்துகள்  மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டன. மும்பை போக்குவரத்தின் உயிர் நாடியாக விளங்கும் மின்சார ரயில் போக்குவரத்தும் அடியோடு முடங்கியது. சயான், மஸ்ஜித் ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியது. தண்டவாளம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியதால் சி.எஸ்.டி - தானே இடையே ஸ்லோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை: பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு!

மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. மும்பை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக வந்தடைந்தன. மேலும் துறைமுக வழித்தடத்திலும் 30 நிமிடங்களுக்கு மேல் ரயில்கள் தாமதமாகவே இயக்கப்பட்டன. புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அவற்றைப் பயன்படுத்தும் பயணிகள் நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்ய அனுமதிப்பட்டனர். இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

மும்பையில் பெய்த பலத்த மழைக்கு விமானமும் தப்பவில்லை. உள்நாட்டு, பன்னாட்டு விமானங்கள் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே நாளில் சாலை, ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் நேற்று மும்பையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, நகரில் பலத்த மழை காரணமாக தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற, மாநகராட்சி ஆணையர் சுதீர் நாயக் தலைமையிலான குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு