Published:Updated:

'சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்!'

'சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்!'
'சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்!'

'சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்!'

'சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்!'

சென்னை: சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'திருச்சி-சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில், (வ.எண் 06024) ஆகஸ்ட் 13-ம் தேதி திருச்சியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

மறு மார்க்கத்தில் வ.எண் 06023, ஆகஸ்ட் 16-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரயில் அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி (வழி மயிலாடுதுறை, கும்பகோணம்) சிறப்பு ரயில் (வ.எண் 06025) ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல், சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்புக் கட்டண ரயில் (வ.எண் 06001) ஆகஸ்ட் 26-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் வ.எண் 06002, ஆகஸ்ட் 28-ம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்' என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு