Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபர்ஸ்ட் டேட்... பெஸ்ட் டேட் ஆக இருக்க வேண்டுமா? #DateEthics

முதல் காதல் மட்டுமல்ல, நமக்கு பிடித்தவர்களுடன் செல்லும் முதல் டேட்டிங்கும் மறக்க முடியாத அனுபவம்தான். ஆனால் அது மனதில் நிற்க வேண்டிய அனுபவமா அல்லது மறக்க வேண்டிய அனுபவமா என்பது நீங்கள் நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது.

முதல் அவுட்டிங் குறித்த உங்கள் டென்ஷனை, பி.பியை குறைக்க இதோ சில டிப்ஸ். என்ஜாய் மக்களே...!

* எங்கே சந்திக்கப் போகிறீர்கள் என்பது மிக முக்கியம். சினிமா, பார்ட்டி என எக்கச்சக்க இடங்கள் இருந்தாலும், பெஸ்ட் சாய்ஸ் ரெஸ்ட்டாரன்ட்கள்தான். காரணம், இந்த முதல் சந்திப்பில்தான் உங்களை பற்றி அவரும், அவரைப் பற்றி நீங்களும், நிறைய பேசித் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கும். அதற்கு, எந்த இடைஞ்சலும், கவனச்சிதறலும் இல்லாமல் இருப்பது முக்கியம். எனவே இரைச்சல் இல்லாத ரெஸ்ட்டாரன்ட்டை செலக்ட் செய்து செல்வதே பெஸ்ட்.

* உங்களை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள், என்பது மிக முக்கியம். அதற்கேற்றார் போல உடை உடுத்துங்கள். அதை செலக்ட் செய்வது மிக சுலபம். சில உடைகளை அணியும்போதே 'இந்த டிரஸ் உனக்கு செமையா செட் ஆகுதே' என கண்ணாடி பார்த்து நீங்களே சொல்லிக் கொள்வீர்கள்தானே. அந்த ஆடைதான் பெஸ்ட் சாய்ஸ். கவனம், ரொம்ப பார்மலாய் இல்லாமல், ரொம்ப கேஷுவலாய் இல்லாமல் செமி பார்மலில் செல்வது சேஃப். காரணம், உங்கள் ஜோடியின் ரசனை பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாதே, கூட்டத்தில் 'நான் இங்கதான் இருக்கேன் பாரு' எனக் காட்டும் பளீர் வகையறா காஸ்ட்யூம்களை தவிர்க்கவும்.

* நீங்கள் ஆபிஸுக்கே அசால்ட்டாய் செல்லும் ஆளாய் இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் பங்ச்சுவாலிட்டி மிக முக்கியம். குறித்த நேரத்தில் அங்கு இருப்பவர்களுக்கு எக்ஸ்ட்ரா மதிப்பெண்கள் கிடைக்கும். எனவே, மற்ற கமிட்மென்ட்களை எல்லாம் நேரத்தோடு முடித்துவிட்டு பிளான் செய்து கிளம்புங்கள். காரணம், 'காத்திருத்தல் சுகம்' எல்லாம் காதல் வந்தபின்தான். இப்போது இல்லை.

* ரெஸ்ட்டாரன்ட்டில் நீங்கள் எப்படி அமர்கிறீர்கள், என்பது மிக முக்கியம். முதல் சந்திப்பிலேயே பக்கவாட்டில் அமர்வதை தவிருங்கள். எதிர் எதிரே அமருங்கள். முகத்தோடு முகம் பார்த்து அமர்ந்து பேசுவதுதான் எவர்க்ரீன் ஐடியா. பேசும்போது கண்களை அலைபாய விடாதீர்கள். எதிரில் இருப்பவரின் கண்ணைப் பார்த்து பேசுங்கள். இந்த மொத்த பிராசஸிலும் மிக முக்கியமானது இது.

* பேச்சை எப்படி தொடங்குவது, என தயக்கம் இருக்கும்தான். சின்ன ஐடியா. 'இந்த டிரஸ் நல்லா இருக்கு, 'It suits you' போன்ற காம்ப்ளிமென்ட்களோடு தொடங்குங்கள். இதைச் சொல்லும்போது மெல்லிய புன்னகையை தவழ விடுங்கள். அது இருவரின் இறுக்கத்தையும் உடைக்க உதவும். ஆனால், கவனம் - பாராட்டுகிறேன் பேர்வழி என அளவுக்கு மீறி அசடு வழியாதீர்கள். இருவருக்கும் பிடித்த பொதுவான விஷயங்களைப் பற்றி பேசுங்கள். எதிரில் இருப்பவர் கவனம் உங்கள் மேல் இல்லையென்றால் நீங்கள் போரடிக்கிறீர்கள் என அர்த்தம். உடனே டாபிக் மாற்ற வேண்டியது அவசியம். நான், எனது என அதிக சுயபுராணம் வேண்டாம். நடுநடுவே வாய்க்கு ஓய்வு கொடுத்து காதுக்கு வேலை கொடுங்கள்.

* பேச்சின் நடுவே அவ்வப்போது ஜாலியாய் ஏதாவது சொல்லி சிரிக்க வையுங்கள். நிஜ வாழ்க்கையில் ஆக்‌ஷனை விட ஹியூமருக்குதான் வேல்யூ அதிகம். அவர்கள் சொல்வதற்கும் சிரியுங்கள். பிறரை கிண்டல், கேலி செய்வதன் மூலம் எதிரில் இருப்பவரை சிரிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள். ஓவர் ஹியூமர் உடலுக்கு நல்லதல்ல.

* ரெஸ்ட்டாரன்ட்டில் இருக்கிறீர்கள்தான்; அதற்காக வெயிட்டர் மெனு கார்டு கொடுத்தவுடன் வாங்கி, மளமளவென ஆர்டர் செய்யாதீர்கள். மெனுவை வாங்கி, எதிரில் இருப்பவரிடம் கொடுத்து 'யுவர் சாய்ஸ்' என ஜென்டிலாய் சொல்லுங்கள். அவர் சொல்லி முடித்ததும், 'இங்கே இந்த குறிப்பிட்ட ஐட்டம் சூப்பராக இருக்கும்' என சஜஸ்ட் செய்யுங்கள். அதை தெரிந்து கொள்ள இருக்கவே இருக்கிறது ஸொமேட்டோ. உணவு வகைகளை ஷேர் செய்து சாப்பிடுங்கள். அள்ளி அமுக்காதீர்கள். உரையாடல்களின் நடுவே கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிடுங்கள்.

* ரொமான்டிக் தருணங்களை குலைக்கும் மிகப்பெரிய ஸ்பாய்லர் நம் மொபைல்தான். எனவே உள்ளே செல்லும்போதே மொபைலை சைலன்ட் மோடில் போட்டு விடுங்கள். நெட்டை ஆஃப் செய்துவிடுங்கள். எந்த காரணத்திற்காகவும் மொபைலை பாக்கெட்டில் இருந்து எடுக்க வேண்டாம். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளியுலக விஷயங்கள் அதுபாட்டுக்கு நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், இந்தக் காட்சியில் நீங்கள்தான் ஹீரோ/ஹீரோயின் என்பதை மறந்து விடாதீர்கள்.

* பில் செட்டில் செய்வதில் தயக்கம் வேண்டாம். அது உங்களைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை விதைக்கக் கூடும். எனவே கேஷுவலாய் பில் பே செய்து விடுங்கள். நீங்கள் கொடுப்பீர்கள் என அவரும், அவர் கொடுப்பார் என நீங்களும் தயங்குவது தர்மசங்கடம். 'இவ்ளோ காசுக்கு வேற எங்கேயாவது சாப்பிட்டிருக்கலாம்' போன்ற கமென்ட்கள் வேண்டாம்.

* கிளம்பும்போது, 'இந்த மீட் நல்லா இருந்தது' என ஒரு காம்ப்ளிமென்ட்டை தட்டிவிடுங்கள். 'போற வழியிலதானே எனக்கும் வீடு. சேர்ந்தே போகலாமா?' எனக் கேட்டுப் பாருங்கள். சிலருக்கு இது பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். பிடித்திருந்தால் யோகம் உங்களுக்கு. மறுத்தால் வற்புறுத்தாமல் வழியனுப்பி விடுங்கள்.

- நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement