Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லவ் பிரேக் அப் ஆகாமல் இருக்க 12 பாயிண்ட்ஸ்

ஒவ்வொரு பையனும் அவன் விரும்பற பொண்ணோட ட்ரீம் பாயா, நல்ல லவ்வரா, ஸ்மார்டா இருக்கத்தான் விரும்புவான். காதலில் சொதப்பாமல் இருக்கவும், காதலியை இன்னமும் இருக்கமா பிடிச்சுக்கவும் இந்தாங்க 12 பாயிண்ட்ஸ். 

1. அவங்கள பத்திரமா பாத்துக்க என்ன வேணும்னாலும் செய்வீங்கன்னு அவங்களுக்கு புரிய வைக்கணும். அதே சமயத்துல, சந்தேகப்படுற மாதிரி கேள்விகளை கேட்கவே கூடாது...  'இன்னைக்கு யாரை பார்த்த? யார்கிட்ட பேசின? எங்க போன?' போன்ற கேள்விகளை தவிர்த்து விடுவது காதலுக்கு ரொம்ப நல்லது.

2. அவங்க கூட அடிக்கடி அன்பா பேசணும் அல்லது அன்பை வெளிப்படுத்தும் விதமான பேசுற வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தனும்.  'உன்னை எப்பவும் கஷ்டப்பட விடமாட்டேன்' - கேப் கிடைச்ச இடத்துல எல்லாம் இப்படி சொல்லி வைங்க. நம்பிக்கையை விதைச்சவன் சந்தோஷத்ததான் அறுவடை செய்வான்னு ஏக் காவ் மே ஏக் கிசான் சொல்லியிருக்காரு. 

3. பொண்ணுங்களுக்கு எப்போதுமே தங்களை ஹீரோ மாதிரி பார்த்துக்கும் பசங்களை தான் பிடிக்கும். அவங்ககிட்ட ஸ்வீட்டா இருக்கணும். அதே சமயத்தில் கெத்தாகவும்  நடந்துக்கணும். குழப்புதா? உடனே, சில்லுன்னு ஒரு காதல் சிடியை தேடிப்பாருங்க.

4. தோள் மீது கை போட்டு பேசுவதை விட, பெண்ணின் இடையை சுற்றி கைபோட்டு பேசி நடப்பதை தான் ரொம்ப லைக் பண்ணுவாங்க. இதில், கொஞ்சம் ரொமாண்டிக் டச் கிடைக்கும். சுருக்கமாக சொன்னா கெளதம் மேனன் ஸ்டைல் ஹீரோவா மாறுங்க பாஸ்.

5. சோகமா இருக்கும்போது அவளுக்கு ஆதரவாக நடந்துக்கனும். நீங்க எவ்வளவு பிஸியா இருந்தாலும் சரி... இந்த நேரத்துல அவங்க கூட நேரம் செலவழிக்காமல் இருந்துவிடக்கூடாது. இதுலதான் நீங்க அவங்களை எவ்வளவு கேர் பண்ணிக்கறீங்கனு புரிஞ்சுப்பாங்க. லவ் இன்னமும் திக் பாண்டிங் ஆகிடும் ஜி. 
 
6. அவங்க ஆபத்தில் இருப்பதாய் உணர்ந்தால், உடனே  சூப்பர் மேனாக மாறிடணும். நம்ம கதைல நாமதானே ஹீரோ? அவங்க மேல எவ்வளவு அக்கறை காட்டுறீங்க என்பதை உணர்த்துவதோடு, ஏதாவது ஆகி இருந்தால் நீங்க என்ன ஆகி இருப்பீங்க என்பதையும் உணர்த்துங்கள். கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா செஞ்சிடணும்ஜி.

7.ஜாலியும், கேலியும் இருந்தால் தான் லவ்வுக்கு அழகு. கலகலனு பேசி அடிக்கடி அவளை ரசிச்சு சிரிக்க வைங்க. ஒருநாளும் அவங்க தோற்றத்தை வைச்சு கிண்டல் செய்யாதீங்க. தினமும் ஒரு தடவையாவது அவங்க செய்யும் நல்ல விஷயத்தை பாராட்டிடுங்க. (இல்லேன்னாலும் ஏதாவது ஒரு நல்லதை பைனாகுலர் வைச்சாவது கண்டுபிடிங்க).

8. ஃப்ரெண்ட்ஸ் வேணும்தான். ஆனா மத்த எல்லோரையும் விடவும் அவங்கதான் உங்களுக்கு முக்கியம்ன்னு காட்டிப்பாருங்க. லவ் நல்லா போகும்.

9. பொண்ணுங்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை மிக்க ஆண்களை தான் பிடிக்கும். அதனால், முடிந்த அளவுக்கு நம்பிக்கையாக இருப்பது அவசியம். அதே சமயம் ஓவர் கான்பிடன்ஸும் உடம்புக்கு ஆகாது. அப்புறம் திமிரு பிடிச்சவன் போலனு நினைச்சுப்பாங்க.  பேசிக்கலி நாம ஜெண்டில்மேன் ஆச்சே! 

10. உங்க காதலை 'ஐ லவ் யூ' என வெறும் வார்த்தையில சொல்லாம, எதிர்பார்க்காத நேரத்தில் சின்ன சர்பரைஸ் கிப்ட் கொடுத்து ஆச்சர்யபடுத்தலாம். ஒரு சின்ன உலக உருண்டயை வாங்கினா கூட “உனக்கான பரிசை உலகெல்லாம் தேடினேன். கிடைக்கல. அதான் உலகையே வாங்கிட்டேன்”ன்னு சொல்லிடுங்க.

11. முக்கியமா ப்ளான் பண்ணாமல் டேட்டிங் போகாதிங்க.. 'என்ன பண்ணப்போறோம், எங்க போறம்'னு மைண்ட்ல குடைச்சல் வந்துட்டே இருக்கும்.  சின்ன பிளானிங் செய்து போனா எல்லாமே சிறப்புதான். 'எதையும் ப்ளான் பண்ணி பண்ணும்' என்ற வடிவேலு தாரக மந்திரம் காதலுக்கும் பொருந்தும் ப்ரோ.

12. உங்க கேர்ள் ப்ரெண்ட் மற்ற பசங்களுடன் பேசினால் உடனே கோபப்படக்கூடாது. நீங்க கூலா இருந்தா தான் அவங்களுக்கு உங்க மேல நம்பிக்கையும், மரியாதையும் கூடுதலா வரும். மத்த பசங்களும் நம்ம ஆளு பின்னாடி சுத்தறாங்கனு இதையும் ரசிக்கும் மனோபாவத்தோட கத்துக்கணும். 

ஆல் த பெஸ்ட் ப்ரோ. சீக்கிரமே கல்யாணம் பண்ணிடுங்க.

- ஹேமா

 

Save

Save

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close