Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சித்தார்த்தன் புத்தனாய் மாறும் மாதக்கடைசி

மாதக்கடைசின்றதே கொடுமையானது. அதைவிடக் கொடுமையானது மாதக்கடைசில வர்ற ஞாயிற்றுக் கிழமை. இன்டர்வல் காட்சியில் பணம் அனைத்தையும் இழந்து சூப்பர்ஸ்டார் நடுவீதிக்கு வருவது போன்றது அந்த உணர்வு. மாதம் முழுக்க செமத்தியாய் செலவுசெய்த நமது வாழ்க்கையில், அந்த ஒரு நாளில் என்னவெல்லாம் தலைகீழாய் மாறியிருக்கும் என மல்லாக்கப்படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்தபடி பலமாகச் சிந்தித்ததில்...

மினிமம் பேலன்ஸையும் சேர்த்து மொத்தப் பணத்தையும் எடுத்ததுபோக, மீதமிருக்கும் 85 ரூபாயை ஏ.டி.எம்.-ல் எடுக்க முடியாது. 100 ரூபாய்க்கும் குறைவான பணத்தை எடுக்கும் ஆப்சனை ரிசர்வ் வங்கி ஏன் இன்னும் கொண்டு வரவில்லை என மானசீகமாய் மனம் கேள்வி எழுப்பும். என்னத்த பொருளாதாரம் படிச்சாங்களோ!

சிக்கனைக் கடிச்சாதான் அது ஞாயிறுன்னு அதுவரை செல்லமா பழக்கப்படுத்தி வச்சிருந்த நம்ம வயிற, குஸ்கால வந்த சின்ன சிக்கன் பீஸக்காட்டி சமாதானப்படுத்துவோம். சிலரோ ஒருபடி மேல போய் பருப்பே போடாம உருளைக்கிழங்கு சாம்பார் செஞ்சு, நல்லாத்தான இருக்குன்னு தன்னைத்தானே பாராட்டுவதும் நடக்கும்.

லீப் வருசம்ன்னா பிப்ரவரில கூட 29 நாள் வருது. ஆனா இந்த மொபைல் கம்பெனிங்க ஏன் 28 நாளைக்குதான் டேட்டா பேக் ஆஃபர் தர்றாங்கன்னு அறச்சீற்றம் வரும். ஆனா இத ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணி லைக் வாங்கமுடியாது. ஏன்னா டேட்டா பேக்தான் காலியாகிருக்குமே! 

விண்டோ ஷாப்பிங் பண்ணி ஓசில ஏசிக்காத்து வாங்கி அரைநாள வெகுஜோரா கழிப்போம். மால்ல இருக்குற பார்க்கிங்ல பைக்க நிப்பாட்டாம வெளிய நூறடி தள்ளியே நிப்பாட்றதெல்லாம் காலம் காலமா நாம கடைப்பிடிக்கிற கலாச்சாரம் தான பாஸ்!

ஹார்ட் டிஸ்க்ல இருக்குற உலகப்படங்களப் பார்த்து மீதி நாள சிறப்பா முடிப்போம். அந்தப் படங்கள்ல ஏற்கனவே கண்டுபிடிச்ச பத்தாயிரம் குறியீடுகளத் தாண்டி, நாம புதுசா பத்து குறியீடுகளக் கண்டுபிடிச்சுருப்போம். வேலையில்லாத நாட்களில் இப்படி வெட்டி ஆராய்ச்சிகள் பண்றது சகஜம்.

பர்ஸ்ல இருக்குற அத்தனை ஓட்டைகளிலும் விரலவிட்டுத் துழாவி பணம் ஏதாவது கிடைக்குதான்னு தேடிப்பார்த்திருப்போம். எதுவும் கிடைக்காம அலமாறில தினமும் கண்டபடி சிதறவிட்ட சில்லறையெல்லாம் தேடியெடுத்து செலவு பண்ண வேண்டியிருக்கும். இந்த நிலைமை நம்ம முன்னாள் காதலியோட லவ்வருக்கும் வரக்கூடாது. 

அடுத்த நாள் ஆபிஸ்க்கு தாடைல ரெண்டு தளும்புகளோட பரிதாபமாப் போவோம். செல்ப் ஷேவிங் முயற்சில வாங்குன வீரத்தளும்புகள் தான் அதுன்னு சிலர் மட்டும் சரியா சொல்வாங்க. ஏன்னா ஒரு பேச்சுலர் மனசு இன்னொரு பேச்சுலர்க்குத்தான் தெரியும் சாரே!

ஸ்விஸ் பேங்க்ல அக்கவுன்ட் ஓப்பன் பண்றது எல்லாருக்கும் உள்ள லட்சியம். ஆனா மாதக்கடைசியானா டீக்கடைல அக்கவுன்ட் சொல்றது நிதர்சனம். இம்புட்டுதாங்க பேச்சுலர் லைஃப்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement