Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓவர் சாப்பாடு உடம்புக்கு ஆகாது பாஸ்!

கல்யாண வீட்டு விருந்திலோ, நண்பர்களின் பர்ஸில் அடைப்பைப் போட்டு நல்ல ஹோட்டலிலோ, 'இருக்கிறப்போ சாப்பிட்டுக்கோ'னு குடும்பத்தில் யாரோ சொன்னதை நினைவில் நிறுத்தி வயிற்றை நிரப்பிக்கொண்டிருப்போம். சாப்பிட்டு முடித்தபின்பு எழுந்திரிக்க முடியாமல் சேர் இடிக்கும்போதுதான் 'கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டமோ..' என உண்மை உச்சந்தலையில் உரைக்கும். அப்படி சோறு கண்ட இடம் சொர்க்கமான பின்பு...

* காலையில் ஆபீஸ் போகாமல் அரைநாளுக்கு பெர்மிஷன் வாங்கி, ஒரு விழாவைச் சிறப்பித்துவிட்டு சாவகாசமாக வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே அலுவலகத்துக்குச் சென்றால் 'உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' எனும் பழமொழிக்கேற்ப, சீட்டில் அமர்ந்த கால்மணி நேரத்தில் தூக்கம் வரும். பின்னே தூக்கம் வராம த்ரிஷாவா பாஸ் வரும்? இந்த மாதிரியான குண்டக்க மண்டக்க கேள்விகளும் கூடவே வரும்.

* கீபோர்ட் வயிற்றில் இடிக்கும். கடைசி வாய்ச் சாப்பாடு கழுத்திலேயே நிற்கும். கை அடிக்கடி கண்ணுக்குப் பக்கத்தில் செல்லும். ஆபீஸ் ஃபைல் அனுப்புங்கனு யாராவது கூறினால் நம் காதில் காபி சாப்பிட வர்றீங்களானு கேட்கும். வயிறு ஃபுல்லா சாப்பிட்டுவிட்டு வேலை பார்க்கச் சொல்றதெல்லாம் கொடுமையின் உச்சம் பாஸ்.

* அமைதியா உட்கார்ந்து மொத்த ஆபீஸும் வேலை பார்த்துட்டு இருக்கும்போது, பெருத்த சத்தத்தோட ஏப்பம் வந்துச்சுனா அதைக் கட்டுப்படுத்தவும் முடியாம, யாரெல்லாம் நம்மைத் திரும்பிப் பார்க்கிறாய்ங்கனு ஒரு கண்ணால் பார்த்துக்கிட்டே அசடு வழிஞ்சபடி நோட்டிஃபிகேஷன் வராத செல்போனுக்கு லாக் எடுப்போம்.


 

* கொசு கடிச்சாக்கூட அதைப் படக்குனு அடிக்கத் தோணாத அளவுக்கு சோம்பேறித்தனமா இருக்கும். பக்கத்தில் வந்து யாராவது 'கொசுகடிக்கிது.. என்னய்யா வேடிக்கை பார்த்துட்டு இருக்குறே' னு கேட்டால், கொசு எவ்ளோ அழகா உட்கார்ந்து குடிக்கிது பாருனு ப்ளூ கிராஸுக்கு நேர்ந்துவிட்ட உறுப்பினர் மாதிரியே பேச ஆரம்பிச்சுருவோம்.

* உள்ளே கேப் இல்லாமல் சோற்றை அடைத்துத் தண்ணீரை ஊற்றியிருப்பதால், திடீரென யாராவது கொடுக்கும் ஸ்வீட் போன்ற ஐட்டங்களைக்கூட உள்ளே போட முடியாமல், 'ஸ்வீட் ரொம்ப சாப்பிடுறது இல்லை..' எனச் சொல்லி சைக்கிள் கேப்பில் வாலன்டியராக சுகர் பேஷன்ட் ஆக வேண்டியதிருக்கும். ரசகுல்லா போச்சே!

இந்தக் கட்டுரையைக்கூட ஏழெட்டு பாயின்ட் யோசிக்க முடியாமல் பாதியிலேயே திக்கித் திணறி பட்டுனு முடிக்கிற மாதிரி சூழ்நிலை ஏற்படும். காலையில சாப்பிடலையேன்னு அதையும் சேர்த்து அடுத்த வேளைக்குச் சாப்பிட்டா இப்படித்தான் ஆகுமோ? அவ்வ்வ்...

- விக்கி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close