Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இது அழகான தாடி.. அட்டாக் பண்ற தாடி! #WorldBeardDay

பல தடைகளையும் தாண்டி ஆசை ஆசையாக தாடி வளர்க்கும் எல்லோரும் ஒரு முறை உங்கள் ஸ்டைலில் தாடியை வருடிக் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு கொண்டாட்டத்திற்கான தருணம். உலக தாடி தினம் இன்று. ஆனா, உண்மையா சுதந்திர நாட்டில் தாடி சுதந்திரமா வளர்க்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

* அதிகமா பசங்க எல்லாருக்கும் தாடி மேல் ஆசை வர ஆரம்பிக்கறது, அப்பா ஷேவ் பண்றத பாக்கறப்போ தான். நமக்கு எப்படா தாடி வளரும், எப்படா கன்னத்துல ஜில்லட்ட தடவலாம்னு காத்துக் கெடப்போம். 

* அதில் சில பசங்க இப்போவே ஒரு ட்ரையல் பாப்போம்னு வீட்ல யாரும் இல்லாதப்போ ஷேவ் க்ரீம தடவி ப்ளேடு கீறி வீரத்தழும்பு எல்லாம் வாங்குவாங்க.  இல்லைங்கறீங்களா, கன்னத்துல தான முடியில்ல தலைல தான் மொச மொசனு வளந்து கெடக்கேனு தலைக்கு ஷேவ் க்ரீம் தடவி ட்ரயல் பார்த்து மறுநாள் மொட்டத் தலையோட ஸ்கூல் போன பசங்கள்லாம் நம்ம பயலுகதேன் பாஸ்.

* ஸ்கூல் படிச்சிகிட்டிருக்கும் நேரம் நம்ம மூஞ்சியில் தாடி முளைக்குமானு பல நேரம் டவுட்டாவே இருக்கும். சலூன் போகும் போது கிருதாவ கொஞ்சம் பெருசா வைங்கனு சொல்லி அழகுபாக்கறதில் ஆரம்பிக்கும் தாடி கனவுகள். அதை வீட்ல யாரும் பார்க்காம இருக்க காலர வெச்சு கன்னத்தைப் பொத்துனாப்புல போனதெல்லாம் வட் எ மெர்சல் மெமரீஸ்.

* ஸ்கூல் முடிக்கற நேரம். அப்ப தான் லைட்டா, குட்டியா தாடி எட்டிப் பாக்கும். ஷேவ் பண்ணா வேகமா வளரும்னு சொல்லுற புரளி எல்லாத்தையும் நம்பி ஷேவ் பண்ணா மறுபடி அந்த குட்டி எல்லாம் எட்டி பார்க்க ஒரு மாசம் காத்துக்கெடக்கணும்.

* காலேஜ் போக ஆரம்பிக்கும் போது கௌரவமா தாடினு சொல்லிக்கற அளவுக்கு வளர்ந்திருக்கும். ஆனா ஒரு அன் ஈவனா அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு இருக்கும். அதை, மலர் டீச்சர்கள் பாக்கலைனாலும் போச்சு, மணிமேகலைகள் பாக்கணுமேன்னு அழகா மெய்ன்டெய்ன் பண்ண ட்ரிம்மரும் கையுமா அலைஞ்சோமே நியாபகம் இல்லையா?

* கட்டக்கடைசியா நல்லா வளர்ந்து வரும் போது, நமக்கும் தாடி வளந்திருச்சுடானு கெத்தா ஒரு ஃபீல் வரும். அப்போ தான் வீட்ல இருந்து ஒரு கேள்வி தொக்கி நிக்கும், "படிக்கிற வயசுல எதுக்குடா தாடி வளர்த்துகிட்டு திரியிற? அப்பா கிட்ட சொல்லட்டா?". ஓ மை காட். தாடிக்கு படிக்கற வயசுன்னு தெரியுமா? வேலைக்கு போற வயசுன்னு தெரியுமா? 

* சரினு வீட்ட சமாளிச்சு தாடியோட தெருவரைக்கும் வந்தா, கண்டிப்பா ஒருத்தர்/ன் கேப்பார்/ன். "லவ் ஃபெயிலியரா தம்பி?". அடக் கொடுமையே தாடி வளத்தது ஒரு குத்தமாய்யா? அதுக்கு ஒரு லவ் ஸ்டோரி க்ரியேட் பண்ணி நீங்களே ப்ரேக் அப்பும் பண்ணிட்டீங்களேய்யா.

* அதோட விட்டா பரவாயில்ல, ஃப்ரெஞ்ச் பியர்ட் வெச்சா பூட்டுவாயாங்கறது, ஹெப்ஸ்டர் ஸ்டைல்ல வெச்சா ஆட்டு தாடினு கலாய்க்கறது. என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன்?

* ஆரம்பகால சினிமாக்கள் கூட வில்லன் வேடத்தில் தாடிக்காரர்களையும், ஹீரோக்களுக்கு க்ளீன் ஷேவ் பண்ணிவிட்டது. அதனால் தாடியின் மீது ஒரு நெகட்டிவ் டோன் விழுந்தது குறிப்பிட வேண்டிய விஷயம். இப்போது அது கொஞ்சம் மாறிட்டாலும் விதை நீங்க போட்டது தானே?

* இந்த உலகமே தாடி விஷயத்தில் நமக்கு சப்போர்ட் பண்ணாலும் ஒரே ஒருத்தர் மட்டும் சதி பண்ணுவார். சலூன் கடைக்காரர். நல்லா வெட்டுறவங்களும் இருக்காங்க (கத்தி வேற வெச்சுருக்காரு). ஆனா, பல சமயம் நாம ஒரு ஸ்டைல்ல மனசுல நினைச்சுகிட்டு சொன்னா அவர் ஒரு டிசைன்ல வெட்டிவிட்டு 'என்னடா எலி பிராண்டி விட்ட மாதிரி ஒரு தாடினு' எல்லாரும் கிண்டல் பண்ணும் படி விளையாடிருவார். ஆம்பளைங்க சாபம் பொல்லாதது சலூன்கார்.

* இதுக்குப் பிறகு யாரும் கேள்வி கேக்க மாட்டாங்கப்பா, கேட்டாலும் கண்டுக்கக்கூடாதுன்னு முடிவு எடுப்போம். இந்த வாட்டி தாடியில 16 புள்ளி கோலம் போடலாம்னு ட்ரிம் பண்ண ஆரம்பிப்போம். லெஃப்ட் சைடு அதிகமா இருக்கே, இப்போ ரைட் சைடு அதிகமா இருக்கேனு மாறி மாறிக் குறைச்சு தாடி இருந்த சுவடே இல்லாம ட்ரிம் பண்ணி வெச்சு, கடைசில இதுகளும் சதி பண்ணுதேனு வெறுத்துப் போய் க்ளீன் ஷேவ் பண்ணுவோம். இதெல்லாம் எவ்வளோ பெரிய ட்ராஜிடி தெரியுமா?

இவ்வளோ ஃபீல் பண்றியே யாருப்பா நீ, உனக்கென்ன அக்கறை யாருக்கும் இல்லாத அக்கறைன்னு நீங்க கேக்கலாம்... மனசத் தொட்டு சொல்லுங்க இதுல எதாவது ஒரு சம்பவமாவது உங்களுக்கு நடக்கலைனு? 

இப்போ கொஞ்சம் சீரியஸாகலாமா... டி.ஆர் ஆரம்பிச்சு மணிவண்ணன், பிரபுதேவா இவ்வளவு ஏன் பிரேமம் நிவின்பாலி வரை பலபேர் இருக்காங்க. அவங்க முகத்தைக் கூட மறந்திடலாம் ஆனா, அவங்க தாடிய மறக்க முடியுமா? தாடிங்கறது ஒழுங்கீனமோ, குறிப்பிட்ட அடையாளமோ, இன்னும் ஏன் ஸ்டைலோ கூட கிடையாது. கூடவே, மேன்லினெஸ், பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும், கான்ஃபிடென்ஸ் கொடுக்கும்னு நிறைய பேர் சொல்வாங்க. அந்த விஷயம் கூட நமக்கு வேணாம். எல்லாத்தையும் தாண்டி அது ஒவ்வொருத்தருடைய விருப்பம். 

தாடி வெச்சிருக்கவங்ககிட்ட மட்டும் இத்தனை கேள்வி கேக்குறீங்களே, க்ளீன் ஷேவ் பண்ணவங்ககிட்ட என்னிக்காவது "ஏன் நீங்க தாடியே வளர்க்க மாட்டறீங்க, லவ் சக்ஸஸ் ஆகிடுச்சா?"னு கேட்டிருக்கீங்களா.. இல்ல கேட்டிருக்கீங்களான்னேன்! 

வேலைக்காக தாடிய இழந்தவங்களுக்கும், வேகாத வெயில்ல ஆஃப்டர் ஷேவ் லோஷன் போட்டு லோல்படுறவங்களுக்கும் 'உலக க்ளீன் ஷேவ் டே' அன்னிக்கி ஒரு கட்டுரையை சமர்ப்பிப்பேன் என்று தாடியை சொறிந்துகொண்டே உறுதியளிக்கிறேன்.

நன்றி நமக்கம்!

-தாடியுடன்

பா. ஜான்ஸன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement