Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாண்புமிகு மனைவிகளின் 8 குணங்கள்!#8PointCheckList


உங்களது என்னவரை இன்னமும் இருக்கமா பிடிச்சு வைச்சுக்கத்தான் இந்த எட்டு பாயிண்ட்ஸ். லெட்ஸ் ஸ்டார்ட்.


8. டிரீம்ல இருந்து வெளியே வாங்க : 

எல்லாருக்குமே தனக்கு அமையப்போகும் கணவரை பற்றி ஒரு ட்ரீம் இருந்திருக்கும். 'அலைபாயுதே' மாதவன் மாதிரி லவ் இருக்கணும். ஆர்யா மாதிரி சேட்டை பண்ணனும்னு பல கனவுகள் திருமணத்திற்கு முன் இருந்திருக்கும். ஆனால், 'நான் நினைச்சு வைச்ச டிரீம் ஹஸ்பன்ட் இவர் இல்லை'னு உடனே அப்சட் ஆகாதீங்க. இவரை உங்க டிரீம் கணவராக மாற்ற முயற்சி செய்யுங்க. அவருடைய குறைகளைச் சொல்லி காமிச்சுட்டே இருக்காதீங்க. இனி இவர்தான் உங்க சூப்பர் மேன் அப்படின்னு நீங்க முதல்ல நம்பணும். அதுதான் திருமணத்திற்கான அஸ்திவாரம்.


7. வெல்கம் பண்ணுங்க : 

அவர் வேலை முடித்து வீட்டுக்கு வந்தால், சிரிச்ச முகத்தோட வெல்கம் பண்ணுங்க. அவர் வந்தது கூட தெரியாம சீரியல் பார்த்துட்டே இருக்கறது, பக்கத்து விட்டு அம்மா கூட சாட்டிங் பண்ணுறது, மொபைல் வைச்சுகிட்டு சோசியல் மீடியாவுல சுத்திப் பார்த்துட்டே அவரை பார்க்காம விட்டுடாதீங்க. உங்க என்னவர் இதுக்கு எல்லாம் ரியாக்ட் செய்யாமல் இருந்தாலும், மனசுக்குள்ள 'நமக்கு இவ எவ்வளவுதான் முக்கியத்துவம் கொடுக்கறாபோல'னு நினைச்சு பார்க்க சாத்தியம் அதிகம். நீங்களும் வொர்க்கிங் வுமனா இருந்தா, அவர்கிட்ட உங்க அலுவலக விஷயங்களை ஷேர் பண்ணுங்க. 


6.  பிடிச்சு இருக்குன்னா செய்ங்க : 

'நீ ஜிமிக்கி போட்டா பிடிக்கும்', 'தலையில பூ வைச்சா பிடிக்கும்', 'நீ சுடிதார் போட்டால் பிடிக்கும்'னு சொல்லி இருந்தால், அவருக்காக அதை செய்ங்க. எப்படியும் நாம கேட்கிறத அவர் செய்யணும்னு நாமளும் எதிர்பார்ப்போம் இல்ல.


5. வாவ்... வாட் ஏ சர்ப்ரைஸ் :

பெரும்பாலும் பெண்கள் ஏதாவது ஸ்பெஷல் டே அனைக்குதான் கிப்ட் கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருப்பாங்க. அப்படி இல்லாமல் எல்லா நாட்களுமே ஸ்பெஷல்தான் நினைச்சுகிட்டு அவர் எதிர்பார்க்காத நேரத்தில் சர்ப்ரைஸ் செய்யுங்கள். அவருக்கு பிடிச்ச உணவு, புதுசாக ஒரு டிரஸ், ஷூ என அவரது தேவைக்கு ஏற்ப அதனை கொடுங்கள். அவரை சர்ப்ரைஸாக அவுட்டிங் கூப்பிட்டு போங்க. லைக் 'ஐ' பட கிளைமேக்ஸ்ல எமி, விக்ரமை கூட்டிட்டுப்போன இடம் மாதிரி. 

4. டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை :

எந்த ரிலேசனாக இருந்தாலும் டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை வருவது இயல்புதான். அதுவும் கணவன் மனைவிக்குள்ள சண்டை வரலைன்னா எப்படி? இந்த குட்டி சண்டைகள் தான் இன்னமும் உங்களது 'என்னவரை' புரிஞ்சுகொள்ள உதவும். 'ராஜா ராணி' படத்துல நயன்தாராவும், ஆர்யாவும் எப்படி சண்டை போடுவாங்க. ஆனா, கிளைமேக்ஸ்ல பிரிவு வரும்போதுதான்.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பாங்க. முக்கியமா, சண்டை போடும்போது 'நம்ம ரெண்டு பேருக்கும் சரி வராது. பிரிஞ்சுடலாம். டைவர்ஸ் வாங்கலாம்'னு சொல்லவே சொல்லாதீங்க. வார்த்தைகளுக்கு உயிர் உண்டு.  

3. பெஸ்ட் ப்ரெண்டாக இருக்கணும் : 

பெஸ்ட் பாட்னராக இருக்கணும்ன்னா முதல்ல பெஸ்ட் ப்ரெண்ஸாக இருக்கணும். உங்க கடந்த கால வாழ்க்கை, எதிர்கால கனவுனு எல்லாத்தையும் ஒரு ப்ரெண்ட் மாதிரி அவர்கிட்ட ஷேர் பண்ணுங்க. அவர்கிட்டயும் கேளுங்க... அவர் கடந்த காலத்துல காதல் இருந்தால் அதையும் கேளுங்க. 'சில்லுனு ஒரு காதல் மாதிரி' அவரோட காலேஜ் டைரியை படிச்சுத்தான் தெரிஞ்சுக்கணும்னு கிடையாது. அப்ப, ஏதாவது லவ் பண்ணி இருக்கார்னு சொன்னால் தாம்தூம்னு குதிக்காமல், உங்களிடம் அவர் எதையும் மறைக்கவில்லை என்று பெருமைபட்டு கொள்ளுங்கள். கல்யாணம் ஆகி 10 வருஷத்துக்கும் மேல ஆச்சு? 'இனி அவரோட லவ் ஸ்டோரி கேட்டு தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போறோம்?'னு எல்லாம் அலுத்துகாதீங்க. காதல் எப்போதுமே சுவாரசியம்தான்.

2.  இன்னொரு பாதி நீங்கதான் : 

அவரது தேவைகள் அனைத்துமே உங்களை சார்ந்துதான் இருக்கும். இதை முழுமையாக செய்யுங்கள். தூய்மையான சுற்றுச்சூழல், குழந்தைகளை பொறுப்பு உள்ளவர்களாக வளர்ப்பது,  நல்ல உணவு, செக்ஸ், பிரச்னைகள் வந்தால் சேர்ந்து சமாளிக்க கை கோர்த்து நிற்பதுனு என உங்களைச் சுற்றிதான் அவர் இயங்கி ஆக வேண்டும். அதனால், இதனை மனதில் வைத்து நடந்துகொள்ளுங்கள். உண்மையாகவே அவரது இன்னோரு பாதி நீங்கள் தான். 

1. உதாரணமாக இருங்க : 

உங்களது கணவருக்கு  ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால், அவரிடம் தொடர்ந்து சண்டையிட்டு 'உடனே நீங்க விட்டு ஆகணும். திருந்தியே ஆகணும்னு வெறுப்பாக்காதீங்க. அவரை கொஞ்சம் கொஞ்சமாக பாசிட்டிவாக மாற்ற முயற்சி செய்யுங்கள். கெட்ட பழக்கங்களால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், நீங்கள் என்ன ஆவீர்கள் என்பதை உணர்த்துங்க. அவருக்கு ஓர் உதாரணமாக இருங்க. அவரது குடும்பத்தினரிடம் 'பேமிலிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கறார். நல்லா பார்த்துக்கிறார்'னு சொல்லுங்க. உங்க கணவர் கெட்டிக்காரர் தான் கண்டிப்பா உங்களை புரிஞ்சுப்பார். 


- ஹேமா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement