Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மார்க் எடுக்க உதவும் பைஜூ..பைஜூவுக்கு உதவும் மார்க்!

பைஜூ என்கிற இந்தியாவின் கற்றல் மென்பொருளுக்கு 332 கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க். 

ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க்கிற்கு ஷாப்பிங் பண்ணுவது என்றால் பிரியம் போல.. வருங்காலத்தில் எதெல்லாம் ஹிட் ஆகும் என்று கணித்து அதையெல்லாம் வாங்கிப் போட்டுவிடுவார். அப்படி மார்க் வளைத்துப் போட்ட மென்பொருள்கள்தான் வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் போன்றவை. கடந்த டிசம்பர் மாதம் Chan Zuckerberg Initiative என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கிய மார்க் ஸக்கர்பெர்க்கும் அவரது மனைவி பிரிசில்லா சானும், "இந்த அறக்கட்டளை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும்" என அறிவித்திருந்தனர்.. இந்நிலையில்தான் நேற்று பைஜூ என்ற இந்தியாவைச் சேர்ந்த கற்றல் மென்பொருளுக்கு தனது அறக்கட்டளையில் இருந்து நிதியுதவி அளிப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் மார்க்.

 

 

 

அது என்ன பைஜூ?

கேரளாவில் பைஜூ ரவிச்சந்திரன் என்பவர் கண்ணூர் மாவட்டத் தெருக்களில் ஃபுட் பால் விளையாடி காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தவர். 2003 ஆம் ஆண்டு IIM எனப்படும் Indian Institute of Management சேர்க்கான நுழைவுத்தேர்வான CAT தேர்வுக்கு எதேச்சையாக கலந்துகொள்ள, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அதில் செஞ்சூரி அடித்தார் பைஜூ. நுழைவுத்தேர்வில் நூற்றுக்கு நூறு எடுத்தாலும் அவரால் கல்லூரியில் சேர இயலவில்லை. ஒரு ஷிப்பிங் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த பைஜூ லீவுக்காக பெங்களூர் வர, அங்கு அவருடைய நண்பர்கள் சில பேரைச் சந்திக்கிறார். எல்லோருமே CAT எக்ஸாமுக்காக தீவிர பயிற்சியில் இருக்கிறார்கள். இவர், கணிதத்தில் தனக்குத் தெரிந்த டெக்னிக்குகளை எல்லாம் சொல்லிக் கொடுத்து நண்பர்களின் தேர்வுக்கு உதவுகிறார். என்ன ஒரு ஆச்சர்யம் அம்புட்டு பேரும் பாஸ்.. தன்னுடைய கணித டெக்னிக்குகளைத் தானே சோதிக்க விரும்பிய பைஜூ மீண்டும் ஒரு முறை CAT எழுத அதிலும் செண்டம். ஆச்சர்யத்தில் உறைந்து போனார் பைஜூ. இதற்கிடையில் இவர் சொல்லிக் கொடுத்து பாஸான நண்பர்கள் எல்லாம் இவர் புகழைப் பரப்ப.. நிறைய பேர் இவரிடம் கற்றுக்கொள்ள வந்தார்கள். தனக்குத் தெரிந்த டெக்னிக்குகளை பிறருக்கும் கற்றுத்தரலாமே என்ற நல்ல நோக்கத்தில் 2007 ஆம் ஆண்டு பைஜூஸ் கோச்சிங்கைத் தொடங்கினார்.

திறமை + பிசினஸ் = வெற்றி!

பெங்களூரில் ஆரம்பித்த இந்தப் பயணம் 2011 ஆம் ஆண்டு ஆன்லைன் வகுப்புகளாக இந்தியா முழுவதும் பரவியது. பாடங்கள் வெறும் எழுத்து வடிவங்களைத் என்பதைத் தாண்டி, வீடியோ வடிவத்திலும், அனிமேஷன் வடிவத்திலும் மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்ள ஏதுவாக இருந்ததால் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. கற்றுக்கொள்வது மட்டுமின்றி இதிலேயே தேர்வுகளும் எழுதி உடனுக்குடன் நம்மை சோதித்துக் கொள்ளவும் முடியும். ஆரம்பத்தில் CAT மட்டுமே கற்றுத்தந்த பைஜூ இப்போது 4 ஆம் வகுப்பில் தொடங்கி 12 ஆம் வகுப்பு வரை எல்லா மாணவர்களுக்கும் அறிவியல் மற்றும் கணிதம் அதோடு எல்லாப் போட்டித்தேர்வுகளுக்கும் இதில் பாடங்கள் கிடைக்கப் பெறுகிறது.
கடந்த ஆண்டு மொபைல் ஆப் ரிலீஸ் செய்த போது அதை டவுன்லோட் செய்து பயன்படுத்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சம். கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் இதில் பணம் கட்டி படிக்கிறார்கள். இதன் பயனாளர்கள் சராசரியாக 40 நிமிடங்களை கற்றலுக்காக செலவிடுகிறார்கள். கடந்த நிதியாண்டு ஆரம்பித்த ஐந்து மாதங்களிலேயே 120 கோடி சம்பாதித்தது பைஜூ. இப்பேர்பட்ட பைஜூ ஆப்க்குத்தான் நிதியுதவி தர முன்வந்துள்ளார் மார்க். Internet.org, Free Basic என்று எந்த முயற்சியாக இருந்தாலும் இந்தியாவில் தொடங்கவேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் மார்க் CZI ஐயும் அப்படியே தொடங்கி இருக்கிறார். ஆம் இதுதான் இந்த ஃபௌண்டேசன் மூலம் பயன்பெறும் முதல் ஆசிய நிறுவனம்.

மார்க் எடுக்க உதவுகிறது பைஜூ.. பைஜூவுக்கு உதவுகிறார் மார்க்! செம்ம..!

- தி.விக்னேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement