Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புத்தகப் புழுக்களுக்காக ஒரு பயணம்

உலகில் ஏற்பட்ட புரட்சிகளும் முன்னேற்றங்களும் அடிப்படையாக இருந்தது, சிறந்த புத்தகங்கள்தான். புத்தகங்களோடு வாழும் வாழ்க்கை அற்புதமானது. தான் படித்து பெற்ற இன்பத்தை, பலருக்கும் கொண்டுசெல்வதற்காக, சென்னை கே.கேநகரில் புக் வார்ம்ஸ் (Book Worms) எனும் நூலகத்தை நடத்திவருகிறார் கோபி.
 
'இன்றைய இளைஞர்கள், புத்தக வாசிப்பு அத்திப் பூப்பதுபோல அரிதாகி விட்டது. அப்படி புத்தகங்களை வாசிக்க நினைப்பவர்களுக்கு, நல்ல புத்தகங்களைத் தேடி அலைய முடியவில்லை. அவர்களுக்கு உதவும் நோக்கத்தில்தான், நான் இந்த புக் வார்ம்ஸ் நூலகத்தைத் தொடங்கினேன்' என்று நம்மை வரவேற்று, உற்சாகமாக பேச ஆரம்பித்தார் 56 வயது நிரம்பிய கோபி.

நூலகத்துக்கு உள்ளே நுழைந்தும் அழகான அலமாரியில் தமிழ், ஆங்கிலம் என எண்ணற்ற புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. அதில் சுயசரிதை, சுயமுன்னேற்றம், கலாசாரம், கல்வி, புதினம், கலை, வர்த்தகம், வரலாறு, தொல்லியல் உள்ளிட்ட 45 ஆயிரத்துக்கும் புத்தகங்கள் இருக்கின்றன.

"சென்னை, சேப்பாக்கத்தில்தான் பிறந்தேன், கல்லூரியில் பி.ஏ புக் இண்டஸ்ட்ரி என்ற புதுவிதமான படிப்பை படித்து முடித்து, இலைட் மற்றும் ஹிக்கிம்பாதம் பதிப்பகத்தில் பணியாற்றினேன். ஆராய்ச்சி புத்தகங்களை, தர பிரிவில் ஈடுப்பட்டிருந்தபோது பல வெளி மாநிலங்களுக்கு பயணம் சென்றேன். அப்போது  சிறுவனாக இருந்த என் மகன் சேஷசாயிக்காக   பல விதமான சிறுவர் புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கி கொடுத்தேன். இப்படியாக ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வீட்டில் குவிந்துவிட்டன. அவற்றை எல்லாம் வீணாக வேண்டாம் என்னும் எண்ணத்தில், நானும் என் மனைவி கிருஷ்ண பிரியாவும் சேர்த்து 2000-ல் சிறுவர்களுக்கேன கே.கே.நகரில் நூலகத்தைத் தொடங்கினோம்."

புக் வோர்ம்ஸ் என்ற பெயரை ஏன் வைத்தீர்கள்?

"பாட புத்தகங்களை மட்டுமே படிக்கும் பிள்ளைகளை புக்வோர்ம் என்று சொல்லி கேலி பண்ணுகிறோம் .இனி அவர்கள்  பிற புத்தகங்களை விரும்பி படிக்கும் வார்ம்ஸாக மாற வேண்டும் என்பதற்காக இந்தப் பெயரை வைத்தேன்" என்றவர் சிறிது இடைவெளிவிட்டு,

"2001-ல் வேலையிலிருந்து வெளியேறிய, நான் இந்த நூலகத்தைக் கவனிப்பதில் என் முழு நேரத்தையும் செலவிட ஆரம்பித்தேன். என் நூலகத்துக்கு சிறுவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள், பிள்ளைகள் தனக்கு வேண்டிய புத்தகங்களைத் தேடி படிக்கும்வரை காத்திருக்க முடியாமல் குழந்தைகளை அவசரஅவசரமாக அழைத்து செல்லுவார்கள். அதைப்பார்க்க கஷ்டமாக இருந்தது. இந்தப் போக்கை மாற்றவே, பெற்றோர்களுக்காகவும் புத்தகங்களை வாங்கி நூலகத்தில் வைக்க ஆரம்பித்ததேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரம்பத்தில் கட்டணம் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட நூலகம், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களின் வருகையால் அவர்களுக்காகவும் புத்தகங்களை வாங்க வேண்டியிருந்தது, இதனால் அரசு  நூலகத்தை  போன்று பணம் செலுத்தி உறுப்பினராக  சேரும் திட்டத்தை கொண்டு வந்தோம் இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்னையில் உள்ளவர்கள் இணையத்தின் மூலமாக ரூபாய் 300 வைப்புத் தொகையாகவும், 500ரூபாய் மாதக் கட்டணமாகவும் செலுத்தி புக் வார்ம்ஸ் நூலகத்தில் உறுப்பினராகலாம். ஒருமுறை ஐந்து புத்தகங்கள் வீதம் ஒரு மாதத்திற்கு 25 புத்தகங்கள் வரை வாங்கி படிக்கலாம். நாம் கேட்கும் புத்தகங்களை வாரம் இறுதி நாட்களில், வீட்டிற்கே வந்து தருவோம். படித்த பின் தகவல் தெரிவித்தால் திரும்ப வீட்டுக்கே வந்து பெற்றும் செல்வோம்"

 "நடமாடும் நூலகமும் நடத்துகிறீர்களாமே?!"

"500 மேற்பட்டோர் உறுப்பினர்கள் உள்ள புக் வார்ம்ஸ் நூலகத்தில், தினமும் 40 மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் பல உறுப்பினர்கள்  வேறு பகுதிகளுக்கு குடிபெயர வேண்டிய இருக்கிறது. இந்த நூலகத்தில் படித்த மகிழ்ந்து இவர்களுக்கு திடீர் இடமாற்றம் பெரிய இழப்பாக இருப்பதாக தெரிவித்தனர். நூலகத்துக்கு வரமுடியாமல் நேரமும் தூரமும் அவர்களைத் தடுத்து விடுகின்றன. இதற்கான தீர்வாக வேன் ஒன்றை வாங்கி அதில் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வைத்து நடமாடும் நூலகத்தை 2010 ல் ஆரம்பித்தேன். இதற்கென தனி ஊழியரை நியமித்து சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு வாரம் இருமுறை வேன் மூலம் சென்று  1000க்கும் மேற்பட்டோருக்கு, புத்தகங்களை வழங்கி வருகிறோம்.

மாணவச் செல்வங்களையும் படிக்க தூண்டும் விதமாக நூலகம் ஒன்றை அமைத்த இது போன்ற நடமாடும் கோபி போன்றவர்கள்தான் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு தேவை.  (இந்த நூலகத்தைத் தொடர்புகொள்ள: 9841028327)
 

- ஆ.ஐஸ்வர்ய லட்சுமி
(மாணவ பத்திரிகையாளர்)
படங்கள் - பா.பிரபாகரன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement