வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (05/10/2016)

கடைசி தொடர்பு:17:11 (05/10/2016)

வாழக் கற்றுத்தரும் ஒவ்வொருவரும் ஆசான் தான்! #WorldTeachersDay

    “நமக்கு பாடம் சொல்லித்தருபவர் மட்டும் ஆசான் அல்ல! தன் வாழ்வையே பாடமாக கூறுபவரும் ஆசான் தான்!” என்ற இந்த வரிகளே பல கதைகள் சொல்லும்.  நாம் இதுநாள் வரை பள்ளிக்கு சென்று அங்கு பாடம் கற்பிப்பவரே ஆசன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறொம். ஆனால், ஆசன் என்பவர் அப்படி அல்ல. ஒருவனுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத்தந்து, அவனுக்குப் பிடித்த பிரிவில் அவன் திறமைகளை வளர்க்க உதவி, அவனை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்பவரே ஆசிரியர் தான். மேலும் ஒருவன் தீய வழியில் சென்று கொண்டிருந்தால் அவனுக்கு அறிவுரைகள் வழங்கி நல்வழிப்படுத்துபவர் ஆசிரியர். அந்த வகையில் பார்த்தால் பள்ளியில் இருப்பவர்கள் மட்டும் ஆசான் அல்ல. நம் பொது வாழ்வில் தன் அனுபவங்களை பாடமாக கற்பிக்கும் பலரும் நமக்கு ஆசான் தான். தாமஸ் ஆல்வா எடிசன்-இல் இருந்து அப்துல்கலாம் வரை ஏதோ ஒரு அனுபவப் பாடத்தை நமக்கு கூறிவிட்டுதான் நாம்மை விட்டு பிரிந்திருக்கிறார்கள். வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு அறிஞர்கள் நமக்கு ஏதோ ஒரு பாடத்தை கூறிவிட்டே சென்றிருக்கிறார்கள். அவற்றை நம்மில் சிலர் ஏற்றுக்கொண்டாலும் பலரும் அதை வெரும் கதைகளாகவே பார்கின்றனர்.


தாமஸ் ஆல்வா எடிசன் சொன்ன விடாமுயற்சி!

 எடிசன் தான் உலகின் முதல் மின்விளக்கை கண்டுபிடித்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் தன்னுடைய வெற்றிகரமான மின்விளக்கை கண்டுபிடிப்பதற்கு பல முறை தோல்வியை கண்டுள்ளார் என்பது பலரும் அறிந்தது. இதில் முதல் முறை தோற்றதும் தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து நமக்கு விடாமுயற்சி என்னும் பாடத்தை விட்டு சென்றிருக்கிறார். அவர் தோல்விகள் இருந்து பாடம் கற்றுக்கொண்டார். தோல்வி அடைந்ததும் வருந்தாமல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார். அதனாலே தான் உலகின் முதல் மின்விளக்கு உருவானது.

அப்துல்கலாம்- அவரிடம் இருந்து கற்றுகொள்ள வேண்டிய பணிவு

நாம் அனைவரும் அறிந்த நம் காலத்து மாமனிதர் அப்துல்கலாம். இவர் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல. அதில் மிகவும் முக்கியமானது அவரிடம் இருந்த பணிவு. சாதாரனமான சிறுவனாக இருந்து அவர் இந்த இந்திய நாட்டின் ஒரு சிறந்த விஞ்ஞானியாக உருவெடுத்த போதிலும் அவரிடம் இருந்த அந்த பணிவு மட்டும் மாறவே இல்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற பலரின் எண்ணத்தை தகர்த்தார் கலாம். சிறுவனாக தன் வாழ்வைத் துவங்கி சிறந்த விஞ்ஞானியாக முன்னேறியவரை தன் பணிவை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை. அதுவே அவரை அந்த உயரத்துக்கு அழைத்துச் சென்றது என்றுகூட கூறலாம்.

ஜி.டி.நாயுடு- அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பெருந்தன்மை

ஜி.டி.நாயுடு ஒரு இந்திய கண்டுபிடிப்பாளர், பொறியாளர் மற்றும் இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படுபவர். இவர் கண்டுபிடிப்புகள் பல. மின்னியல், இயந்திரவியல், விவசாயம், வாகனம் ஆகிய துறைகளில் இவரது கண்டுபிடிப்புகள் ஏறாளம். இவர் இத்தனை கண்டுபிடிப்புகளையும் தன் சுயலாபத்துக்காக உருவாக்கவில்லை. மக்கள் நலனுக்காகவே அனைத்து கண்டுபிடிப்புகளையும் உருவாக்கினார். இவர் கண்டுபிடிப்புகளை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என நினைக்கவில்லை. அனைத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கே கொடுத்தார். இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இந்த பெருந்தன்மை.

மேரி கியூரியின் அர்ப்பணிப்பு!

நாம் அனைவரும் அறிந்த ஒரு இயற்பியல் விஞ்ஞானி மேரி கியூரி. நோபல் பரிசு பெற்ற முதல் பெண், பின் இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். இவர் ரேடியம் மற்றும் பொலோனியம் என்ற இரு தனிமங்களை கண்டுபிடித்தார். அந்த கண்டுபிடிப்பிற்காக இவர் அர்ப்பணித்தது தன் உயிரை! ஆம், இவரது கண்டுபிடிப்பே இவரின் உயிரை எடுத்துவிட்டது. தன் கண்டுபிடிப்பிற்காக தன் உயிரையே அர்ப்பணித்த கியூரியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு உயரிய பண்பு அர்ப்பணிப்பு.

இவை அனைத்து ஒரு எடுத்துக்காட்டிற்கே. இன்னும் பல அறிஞரின் வாழ்க்கைப் பக்கங்களை திருப்பிப் பார்த்தால், அந்த பக்கங்கள் நமக்கு பல பாடங்களைக் கற்பிக்கும். கற்றுக்கொள்ளுங்கள், கற்றது கை மண் அளவுதான். கல்லாதது இன்னும் எவ்வளவோ உள்ளது. கற்றலுக்கான தேடல் இந்த இனிய நாளில் இனிதே துவங்கட்டும். இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

முரளி.சு
மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்