எட்டுக்கைகள் இருந்த போதிலும் எலும்புகளே இல்லாத விலங்கு! #World OctopusDay

இது கடல்வகை ஸ்பீசிஸ்களை கொண்டாடும் நேரம் மக்களே!!!! ஆக்டோபஸ் நியாபகம் இருக்கிறதா? ஆக்டோபஸ் என்றவுடன், 2010 உலக கோப்பைக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் வரை வெற்றி தோல்வி குறித்து கணித்ததால் உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டதே!!!! அதன் பின்னர் தான் நம்மில் பலருக்கு இந்த அரியவகை உயிரினம் கண்ணில்பட்டது. இப்பொழுது எதற்கு ஆக்டோபஸ் என்கிறீர்களா?

கண்கவர் ஆக்டோபஸ்கள்:

இன்றைய தினம் அக்டோபர் 8, உலக ஆக்டோபஸ் தினம் மக்களே!!!! தமிழில் சாக்குக்கணவாய் என்று கூறப்படும் இந்த கடல்வாழ்விலங்கு உலகின் அதிகம் விளக்கமற்ற உயிரினம் என்பது என்னவோ உண்மை தான்……. அதிகம் காணப்படாத (அ) கண்டறியப்படாத உயிரினம் என்ற போதிலும் இந்த 8 கால்களைக் கொண்ட அரிய வகை உயிரினத்தைப் பற்றி புரிந்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான். ஆக்டோபஸ்கள் உடலமைப்பு கண்ணைக்கவரும் என்பதில் எவ்வித மாறுபாடும் இல்லை.

ஆக்டோபஸ் –உயிரியல் வகையில்:

எட்டுக்கைகள் இருந்த போதிலும் எலும்புகளே இல்லாத விலங்கு தான் இந்த ஆக்டோபஸ். உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவந்து விடும். இந்த ஆக்டோபஸ், மெல்லுடலிகள் என்னும் தொகுதியிலும், தலைக்காலிகள் என்ற வகுப்பிலும், எண்காலிகள் என்னும் உயிரின வரிசையில் உள்ள விலங்கு. தலைக்காலிகள் வகுப்பில் மட்டும் 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்கிறார்கள்.

ஃபோக்கஸ் கண்கள் கொண்டவை:

முதுகெலும்பற்ற பிராணிகளிலேயே அதிக வளர்ச்சியடைந்த மூளையையும் கண்களையும் உடையதுதான் ஆக்டோபஸ். நம்மைப் போல அவற்றின் கண்களுக்கும் ஃபோக்கஸ் செய்ய முடியுமாம். வித்தியாசமான வெளிச்சங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் முடியுமாம்,  மூளையிலுள்ள ஆப்டிக் லோப் கண்களிலிருந்த பெறும் தகவலை மொழிப்பெயர்க்கவும் செய்கிறதாம். தொடு உணர்வு புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க உதவிசெய்கிறதாம்.

குறைந்த வாழ்நாள்:

உண்மையில் கூறப்போனால், ஆக்டோபஸ்களுக்கு ஆயுள்காலம் ரொம்பவும் குறைவு தான். வட பசிபிக் பெருங்கடலில் வாழும் ஆக்டோபஸ் மட்டும் கிட்டத்தட்ட 4-5 ஆண்டுகள் உயிர் வாழ்கிறது என்கின்றனர். இனப்பெருக்கத்திற்குப் புணர்ந்த சிலமாதங்களிலேயே ஆண் ஆக்டோபஸ்கள் இறந்துவைடுமாம், முட்டையிட்ட பின்னர் பெண் ஆக்டோபஸ்களும் இறந்துவிடுமாம்.

 

 

புத்திசாலித்தனமான உயிரினத்தை பார்த்துக்கொள்வோம்:

பொதுவாக ஆக்டோபஸ்கள் மிகவும் புத்திசாலிகள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எடுத்துக்காட்டுக்கு கூறவேண்டுமென்றால், முக்குளிப்பவர் தனக்கு எவ்வகை தீங்கும் செய்யமாட்டார்கள் என்பதை அறிந்தவுடன் ஆக்டோபஸின் கூச்சம் சட்டென மறைந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்கின்றனர். புத்திசாலித்தனமான இந்த கடல்வாழ் உயிரனத்தைப் பாதுகாத்து வாழ்வோம்!!!

-ஜெ. நிவேதா,
மாணவப் பத்திரிகையாளர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!